தேசியம்
'ஸ்மார்ட் பார்டர்' திட்டம்! பாகிஸ்தான், வங்கதேச எல்லைகளில் அடுத்த ஓராண்டுக்குள் வலுவான, 'ஸ்மார்ட் பார்டர்' திட்டம் துவக்கப்படும். இத்திட்டம், நவீன தொழில்நுட்பம், ட்ரோன்கள், ரேடார்கள், அதிநவீன கேமராக்களின் உதவியுடன் செயல்பட்டு, எல்லை பாதுகாப்பை அசைக்க முடியாததாக மாற்றும். யாராலும் இனி ஊடுருவ முடியாது. அமித் ஷா மத்திய அமைச்சர், பா.ஜ.,
பிழையின்றி நடக்கும்! ஜூ ன் 21ல் நடக்கவுள்ள, 'நீட்' இளநிலை மறு தேர்வு எந்தவித பிழையுமின்றி தி ட்டமிட்டபடி நடக்கும். கல்வி முறையில் முறைகேடுகளில் ஈடுபடுவோர் மற்றும் தேர்வு மாபியாக்களின் சதி காரணமாக, தகுதியுள்ள ஒரு மாணவர் கூட மருத்துவ இடத்தை இழந்துவிடக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தர்மேந்திர பிரதான் மத்திய கல்வி அமைச்சர், பா.ஜ.,
பா.ஜ.,வுடன் ரகசிய டீலிங்! பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் சஞ்சய் பண்டி குமாரின் மகன் சாய் பகீரத் மீது, 'போக்சோ' வழக்கு பதியப்பட்டு ஒன்பது நாட்கள் வரை அவர் கைது செய்யப்படவில்லை. அவரது கைது தாமதம் ஆனதற்கு, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கும், பா.ஜ.,வுக்கும் உள்ள ரகசிய டீலிங்கே காரணம். கே.டி.ராமா ராவ் செயல் தலைவர், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி
மேலும்
-
ஓட்டு போட்டவர்களுக்கும், மறந்தவர்களுக்கும் நன்றி
-
என் உழைப்பு வீண் போகவில்லை: 'யு டியூபர்' சவுக்கு சங்கர் பெருமிதம்
-
அறுபத்து மூவர் நாயன்மார்கள் ஊர்வலம்
-
கஞ்சா பதுக்கிய இருவர் கைது
-
ஆன்மிக சொற்பொழிவு
-
அச்சம் வேண்டாம்! அவிநாசி அருகே சிறுத்தை நடமாட்டம் இல்லை... ஆய்வு மேற்கொண்ட வனத்துறையினர் திட்டவட்டம்