போதை பொருள் விற்பனை செய்த சிறுவன் கைது

புதுடில்லி, மே 23 -

வடமேற்கு டில்லி, மகேந்திரா பார்க் பகுதியில், போதை பொருள் விற்பனை செய்து வந்த சிறுவன் கைது செய்யப்பட்டான்.

மகேந்திரா பார்க் பகுதியில் உள்ள ராஜஸ்தானி உத்யோக் நகரில், ஒரு வீட்டில் போதை பொருள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்த வீட்டிற்கு போலீசார் சோதனையிட சென்றனர். அந்த வீடு பூட்டப்பட்டிருந்தது. அழைப்பு மணி அழுத்தியும், வீட்டின் உடமைதாரர் மொபைல் போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டும் வீட்டை திறக்கவில்லை.

இதையடுத்து கேட்டின் உடைத்து உள்ளே புகுந்த போலீசார், வீட்டிற்குள் இருந்த ஒரு சிறுவனை பிடித்து விசாரித்தனர். சிறுவனிடம் போதை பொருட்களும், பணமும் இருந்தது.

அந்த சிறுவன் போதை பொருள் விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சிறுவனை கைது செய்த போலீசார், அவனிடம் இருந்து போதை பொருட்கள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

போதை பொருள் விற்பனை சட்டத்தின் கீழ், சிறுவன் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement