குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
புவனகிரி: புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தில், பஞ்சாயத்து அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது.
பெண் பிள்ளைகளை பாதுகாக்கவும், குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், முறையான கல்வி அளிக்கும் நோக்கிலும், சிறப்பு கவனம் செலுத்தி பல்வேறு நடவடிக்கைகள அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில் நேற்று புவனகிரி பேரூராட்சியில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது.மாவட்ட பணியாளர் கலைவாணி வரவேற்றார்.
கண்காணிப்பாளர் கண்ணன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தனர். இதில் பெண் குழந்தைகளுக்கு எதிரான செயல்களை தவிர்த்து, அவர்கள் முன்னேற்றத்திற்கான வழிமுறைகளை பின்பற்றுவது குறித்து ஆலோசனைகள் வழங்கினர்.
செயல் அலுவலர் அண்ணாதுரை பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். மேலும், பெண் சிசுக்கொலை, குழந்தை திருமணம் தடுப்பு, பாலியல் வன்முறை உள்ளிட்டவைகள் குறித்து, விவாதிக்கப்பட்டதுடன், குழந்தை உதவி மையம் குறித்து, ஆலோசிக்கப்பட்டது.
தொடர்ந்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை எழுத்தர் மங்களநாத சேதுபதி நன்றி கூறினார்.