கிண்டலில் துவங்கி ரத்த வெள்ளத்தில் முடிந்த அண்டை வீட்டு தகராறு
புளியந்தோப்பு: முன்விரோதம் காரணமாக கிண்டலில் துவங்கிய அண்டை வீட்டு தகராறு, வெட்டுக்குத்தில் முடிந்ததில் ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவர், மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புளியந்தோப்பு, குட்டி தம்பிரான் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தன், 45. இவரது மகள்கள் இளவரசி, சங்கவி. இவர்களது எதிர் வீட்டில் வசிப்பவர் டேவிட், 35. இவரது மகள் காமினி. இந்த இரண்டு குடும்பங்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.
கடந்த 18ம் தேதி இரவு 10:00 மணி அளவில் டேவிட், சங்கவியை பார்த்து பாட்டு பாடி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த சங்கவியின் உறவினர்கள் தட்டிக்கேட்டுள்ளனர். அப்போது இருதரப்பிற்கும் தகராறு ஏற்படவே, ஒருவரையொருவர் தாக்கி கொண்டுள்ளனர்.
இரு தரப்பிலும் காயமடைந்தவர்கள், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றனர். இது குறித்து புளியந்தோப்பு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10:30 மணி அளவில் டேவிட் தரப்பினர், ஆனந்தனின் வீட்டில் புகுந்து பெண்களிடம் தகாத வார்த்தைகளால் பேசியதோடு, வீட்டில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர். மேலும், ஆனந்தன் மற்றும் அவரது தம்பி பழனி ஆகியோரை சரமாரியாக வெட்டினர். அக்கம் பக்கத்தினர், இருவரையும் மீட்டு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது குறித்து விசாரித்த புளியந்தோப்பு போலீசார், டேவிட் அவரது உறவினரான மோசஸ், 30 ஆகியோரை நேற்று காலை கைது செய்து சிறையில் அடைத்தனர். மற்றவர்களை தடி வருகின்றனர்.
மேலும்
-
நிழற்குடையில் இருக்கைகள் சேதம் சீரமைக்க பயணியர் வலியுறுத்தல்
-
மந்தவெளி அம்மனுக்கு பால்குட ஊர்வலம்
-
சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
-
விளம்பர விருப்பம் வித்யாசாகர் மகளிர் கல்லுாரி 17ம் ஆண்டு பட்டமளிப்பு விழா
-
ஜெயப்பிரியா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா
-
தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி