மேம்பால பணி படுமந்தம் விரைந்து முடிக்க கோரிக்கை

கடம்பத்துார்: சத்தரை பகுதியில் மந்தகதியில் நடந்து வரும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென, 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடம்பத்துார் ஒன்றியத்தில், சத்தரை – கொண்டஞ்சேரி இடையே உள்ள கூவம் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலம், 2016, 2021, 2022, 2023, 2024ம் ஆண்டு என, ஐந்து முறை தரைப்பாலம் சேதமடைந்தது. இதனால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால், வாகன ஓட்டிகள் மற்றும் 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடும் சிரமப்பட்டு வந்தனர்.

கடந்த 2025 ஜூன் மாதம் 14 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பால பணி துவங்கியது. இந்த மேம்பால பணி மந்தகதியில் நடந்து வருவதால், 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். 

எனவே, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென, 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement