தனியார் மருத்துவமனை அருகே சேதமடைந்த மழைநீர் கால்வாய்
காஞ்சிபுரம், மே 23–
காஞ்சிபுரத்தை அடுத்த காரப்பேட்டையில், மழைநீர் கால்வாய் மேற்புறம் சேதமடைந்துள்ளதால், நோயாளிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் அருகே, சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனை அருகே, சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், சாலையோரம் உள்ள மழைநீர் கால்வாய் மேற்புறம் சேதமடைந்துள்ளதால், இரவு நேரத்தில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் உதவியாளர்கள், விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
மருத்துவமனைக்கு செல்லும் வழியில், பல இடங்களில் மழைநீர் கால்வாய் மேற்புறம் சேதமடைந்துள்ளது. இதனால், விபத்து ஏற்படும் முன், மழைநீர் கால்வாய் சேதங்களை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நிழற்குடையில் இருக்கைகள் சேதம் சீரமைக்க பயணியர் வலியுறுத்தல்
-
மந்தவெளி அம்மனுக்கு பால்குட ஊர்வலம்
-
சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
-
விளம்பர விருப்பம் வித்யாசாகர் மகளிர் கல்லுாரி 17ம் ஆண்டு பட்டமளிப்பு விழா
-
ஜெயப்பிரியா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா
-
தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி
Advertisement
Advertisement