விளம்பர விருப்பம் தளபதி மகளிர் கல்லுாரியில் 2வது பட்டமளிப்பு விழா
திருத்தணி: திருத்தணி தளபதி கே.விநாயகம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாணவியருக்கு இரண்டாவது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.
சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வரும் திருத்தணி தளபதி கே.விநாயகம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 2021- – 2024ம் கல்வியாண்டில், பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பிஎஸ்.சி., கணிதம், இயற்பியல், கணினி அறிவியல், வேதியியல், பிகாம்-, கணக்கியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்ற மாணவியருக்கு பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு, தளபதி கே.விநாயகம் கல்விக் குழுமத்தின் தாளாளர் எஸ்.பாலாஜி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் வேதநாயகி வரவேற்றார். இதில், சென்னை பல்கலையின் தேர்வாணையர் முனைவர் அருள்வாசு பங்கேற்று, மாணவியருக்கு பட்டம் வழங்கினார்.
அதன்பின் அவர் பேசியதாவது:
மாணவியர் கல்வி அறிவை பெறுவதுடன், வாழ்க்கை தரத்தை கற்றுக் கொள்ள வேண்டும். அதை பெற்றோர், பேராசிரியர் மற்றும் கல்வி நிர்வாகத்தால் மட்டுமே பெற முடியும். மேலும், பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ள மனதைரியத்துடன் செயல்பட வேண்டும். அதற்கு கல்வி மட்டுமே சிறந்த ஆயுதமாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சி முடிவில், துணை முதல்வர் பொற்செல்வி நன்றி தெரிவித்தார்.
மேலும்
-
நிழற்குடையில் இருக்கைகள் சேதம் சீரமைக்க பயணியர் வலியுறுத்தல்
-
மந்தவெளி அம்மனுக்கு பால்குட ஊர்வலம்
-
சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
-
விளம்பர விருப்பம் வித்யாசாகர் மகளிர் கல்லுாரி 17ம் ஆண்டு பட்டமளிப்பு விழா
-
ஜெயப்பிரியா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா
-
தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி