வேலை வாய்ப்பு முகாமில் 35 பேருக்கு நியமன ஆணை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நடந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 35 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் முரளிதரன் தலைமை தாங்கினார். காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடந்த இம்முகாமில், உள்ளூர் மற்றும் வெளியூர் மாவட்டத்தை சேர்ந்த 19 தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, நேர்க்காணல் நடத்தினர். இதில், மாவட்டத்திற்குட்பட்ட 173 பேர் பங்கேற்றனர். இதில், தேர்வு செய்யப்பட்ட 35 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

Advertisement