தோற்றாலும் பெங்களுரு அணி முதலிடம்: ஐதராபாத் 3வது இடம்!
ஐதராபாத்: பெங்களூரு அணி நேற்று தனது கடைசி லீக் போட்டியில் 55 ரன்னில் தோற்ற போதும், 'ரன் ரேட்' அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. ஐதராபாத் வென்ற போதும், மூன்றாவது இடமே பெற முடிந்தது.
வருடம் தோறும் கிரிக்கெட் லீக் தொடர் நடக்கிறது. ஐதராபாத், ராஜிவ் மைதானத்தில் நடந்த போட்டியில் பெங்களூரு, ஐதராபாத் மோதின. இரு அணிகளும் ஏற்கனவே 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. தலைப்பகுதி காயத்தில் இருந்து தேறிய ரஜத் படிதார், மீண்டும் பெங்களூரு கேப்டனாக களமிறங்கினார். 'டாஸ்' வென்ற ஐதராபாத் கேப்டன் பாட் கம்மின்ஸ், 'பேட்டிங்' தேர்வு செய்தார்.
கலக்கல் துவக்கம்:
ஐதராபாத் அணிக்கு அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் வழக்கம் போல அதிரடி துவக்கம் தந்தனர். புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரில் ஹெட் ஒரு பவுண்டரி, அபிஷேக் ஒரு சிக்சர் அடித்தனர். ரசிக் சலாம் ஓவரில் (4வது) 3 பவுண்டரி அடித்த ஹெட், 26 ரன்னுக்கு வெளியேறினார். பின் அபிஷேக், இஷான் கிஷான் அசத்தினர். 20 பந்தில் அரைசதம் எட்டிய அபிஷேக், 56 ரன்னுக்கு (22 பந்து, 4X4, 5X6) அவுட்டானார்.
ஒரே ஓவரில் 27 ரன்:
அடுத்து இஷான் கிஷான், கிளாசன் சேர்ந்து, பெங்களூரு பந்துவீச்சை ஒருகை பார்த்தனர். சிக்சர் மழை பொழிந்த இவர்கள், ஸ்கோரை படுவேகமாக உயர்த்தினர். ஹேசல்வுட் ஓவரில் (13வது) கிளாசன் (6,6,4,6) வெளுத்து வாங்க, மொத்தம் 27 ரன் கிடைத்தன. இஷான், 31 பந்தில் அரைசதம் எட்டினார். மறுபக்கம் கிளாசன், 23 பந்தில், இத்தொடரில் 6வது அரைசதம் அடித்தார்.
குர்ணால் பாண்ட்யா பந்தில் கிளாசன் (51 ரன், 24 பந்து, 2X4, 5X6) 'பெவிலியன்' திரும்பினார். ரசிக் சலாம் பந்தில் இஷான் (79 ரன், 46 பந்து, 8X4, 3X6) வெளியேறினார். ஐதராபாத் அணி 20 ஓவரில் 255/4 ரன் குவித்தது. நிதிஷ் குமார் (29) அவுட்டாகாமல் இருந்தார்.
கோலி அதிர்ச்சி:
கடின இலக்கை துரத்திய பெங்களூரு அணிக்கு வெங்கடேஷ் ஐயர் வலுவான துவக்கம் தந்தார். ஷிவாங் குமார் ஓவரில் 6,4,6,6 என விளாசினார். வெங்கடேஷ், 44 ரன்னுக்கு (19 பந்து) அவுட்டானார். அனுபவ கோலி (15), தேவ்தத் படிக்கல் (21) நிலைக்கவில்லை. 9 ஓவரில் 94/3 ரன் எடுத்து தவித்தது.
பின் கேப்டன் ரஜத் படிதார், குர்ணால் பாண்ட்யா சேர்ந்து, முதலிடம் பிடிக்க தேவையான ஸ்கோரை எட்ட உதவினர். அரைசதம் கடந்த படிதார், 56 ரன்னுக்கு (39 பந்து, 6X4, 1X6) நடையை கட்டினார். பெங்களூரு அணி 20 ஓவரில் 200/4 ரன் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. பாண்ட்யா (41), டிம் டேவிட் (15) அவுட்டாகாமல் இருந்தனர்.
ரன் கணக்கு...
பெங்களூரு அணி 178 அல்லது அதற்கு மேல் ரன் எடுத்தால், புள்ளிப்பட்டியலில் முதலிடம் உறுதி என்ற நிலை இருந்தது. பெங்களூரு 200/4 ரன் எடுத்ததால், 'ரன்-ரேட்' அடிப்படையில் முதலிடத்தை பெற்றது.
* ஐதராபாத் அணி 90 அல்லது 90+ ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தால் முதலிடம் பிடித்திருக்கலாம். ஆனால், 55 ரன் வித்தியாசத்தில் மட்டும் வென்றதால், 3வது இடமே கிடைத்தது.
* புள்ளி பட்டியலில் 2வது இடம் பிடித்த குஜராத் அணியும், முதலிடம் பிடித்த பெங்களூரு அணியும், குவாலிபயர் 1ல் மோத உள்ளன.
congratulations.. rcbமேலும்
-
ஒரு விசில் சத்தத்துக்கே ஆடிப்போன திராவிட மாடல்: பா.ஜ., கிண்டல்
-
பெரிய நிறுவனங்களுக்கு எளிதாக கடன்; சாமானியருக்கு வழங்குவதில் அலட்சியமா?
-
வி.சி.க., முஸ்லிம் லீக் கட்சிகளை விமர்சித்து தி.மு.க., - எம்.பி., ராஜா ஆபாச கருத்து: பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம்
-
25 மணி நேரம் மின் தடைஅம்மாபேட்டையில் அவதி
-
சூறைக்காற்றால் எஸ்.பி., ஆபீசில் சாய்ந்த மரம்
-
வாலிபர் மூளைச்சாவு: உறுப்புகள் தானம்