ஜெயப்பிரியா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா
மந்தாரக்குப்பம்: பொது தேர்வில் சிறப்பிடம் பிடித்த ஜெயப்பிரியா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
ஜெயப்பிரியா வித்யாலயா கல்விக் குழுமத்தை சேர்ந்த சி.பி.எஸ்.சி. மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மத்திய, மாநில அரசு பொதுத் தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சியுடன், சிறப்பான மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வில் கணித அறிவியல் பிரிவில், மாணவர் சிவராஜன், 596 மதிப்பெண்கள் பெற்று, மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றார்.
மெட்ரிக் பாடத்திட்டத்தில், 10 ம் வகுப்பு பொதுத்தேர்வில் 493 மதிப்பெண்களும், சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வில், 10ம் வகுப்பில் 491, பிளஸ் 2 வகுப்பில் 482 மதிப்பெண்களும் பெற்று, சாதனை செய்த மாணவர்களுக்கு கல்விக் குழுமத்தின் சார்பாக விருத்தாசலம் சி.பி.எஸ்.இ., பள்ளியில் பாராட்டு விழா நடந்தது.
பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்த மாணவர்கள், மாநில, மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள்,
100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள் மற்றும் உறுதுணையாக இருந்த முதல்வர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு ஜெயப்பிரியா வித்யாலயா கல்விக் குழும தலைவர் ஜெயசங்கர் பொன்னாடை அணிவித்து விருதுகள் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டு தெரிவித்து வாழ்த்தினார்.
நிகழ்ச்சியில் ஜெயப்பிரியா வித்யாலயா கல்விக் குழும தலைமை முதல்வர் அந்துவன், வடக்குத்து பள்ளி செயலாளர் சிந்து, பள்ளியின் முதல்வர்கள் சுதர்சனா, நித்யா, கிருஷ்ண மூர்த்தி, சிதம்பரி, ரேவதி, ஸ்ரீ பாலா, திவ்யா , பிரியா மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
பெரிய நிறுவனங்களுக்கு எளிதாக கடன் சாமானியருக்கு வழங்குவதில் அலட்சியமா?
-
நீதித்துறை தொடர்பான சர்ச்சை பாடம் உத்தரவில் மாற்றம் செய்தது சுப்ரீம் கோர்ட்
-
ரூ.82,000 கோடி கடன் வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ., வழங்கியது
-
ரூபாய் மதிப்பு 100ஐ தாண்டினால் என்ன? ரிசர்வ் வங்கி தலையிட தேவையில்லை
-
'இந்தியா போஸ்ட் - பிளிப்கார்ட்' விரைவான டெலிவரிக்கு ஒப்பந்தம்
-
தோற்றாலும் பெங்களுரு அணி முதலிடம்: ஐதராபாத் 3வது இடம்!