மாநில எல்லையில் கஞ்சா விற்பனை தனிக்குழு அமைத்து தீவிர கண்காணிப்பு
பந்தலுார்: பந்தலுார் பகுதியில் கஞ்சா விற்பனை மற்றும் பயன்பாட்டை தடுக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக எல்லையில் பந்தலுார் பகுதியில் உள்ளதால் கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து, கஞ்சா கடத்தி வந்து, இப்பகுதிகளில் சில்லறை விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது.
தற்போது, டாஸ்மாக் மது கடைகள் மூடப்பட்ட நிலையில், போதைக்கு அடிமையான சிலர் தற்போது கஞ்சா பயன்பாட்டிற்கு அடிமையாகி வருகின்றனர். இந்நிலையில், தேவாலா டி.எஸ்.பி., கல்யாணகுமார் மேற்பார்வையில், தனிக்குழு அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் தொடர் ஆய்வு மற்றும் கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.
அதில், பந்தலுார், இரும்புபாலம், கூவமூலா, தேவாலா, வாழவயல் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அதில், யோகேஷ்,23, என்பவன் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதுடன், ஏற்கனவே சிறை தண்டனை பெற்று வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
போலீசார் கூறுகையில், ‘ இப்பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தால், பொதுமக்கள் தேவாலா போலீஸ் நிலையத்தில் தகவல் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தகவல் கூறியவர்களின் பெயர் விபரங்களும் ரகசியமாக வைக்கப்படும்,’என்றனர்.
மேலும்
-
பெரிய நிறுவனங்களுக்கு எளிதாக கடன் சாமானியருக்கு வழங்குவதில் அலட்சியமா?
-
நீதித்துறை தொடர்பான சர்ச்சை பாடம் உத்தரவில் மாற்றம் செய்தது சுப்ரீம் கோர்ட்
-
ரூ.82,000 கோடி கடன் வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ., வழங்கியது
-
ரூபாய் மதிப்பு 100ஐ தாண்டினால் என்ன? ரிசர்வ் வங்கி தலையிட தேவையில்லை
-
'இந்தியா போஸ்ட் - பிளிப்கார்ட்' விரைவான டெலிவரிக்கு ஒப்பந்தம்
-
தோற்றாலும் பெங்களுரு அணி முதலிடம்: ஐதராபாத் 3வது இடம்!