தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வினியோகம் 

திருப்பூர், மே 23–

பத்தாம் வகுப்பு தேர்ச்சி முடிவுகள் வெளியான நிலையில், நேற்று உயர்நிலைப் பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வினியோகிக்கப்பட்டது.

கடந்த, 20 ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. திருப்பூர் 96.28 சதவீத தேர்ச்சி பெற்று, மாநிலத்தில், 11 வது இடம் பெற்றது. தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் மேல்நிலைப் பள்ளிகளில் இணைய வசதியாக உயர்நிலைப்பள்ளிகளில் நேற்று தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. 

மாணவர் மதிப்பெண் விபரங்களை, பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளி சீலிட்டு வழங்கினர். விடைத்தாள் நகல் பெற விரும்புவோர் வரும், 27 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்ச்சி பெறாத, தேர்வுக்கு வராத மாணவர்களுக்கு ஜூலை 8 – 15 வரை துணைத்தேர்வு நடக்கவுள்ளது. இத்தேர்வுக்கு வரும், 22 ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு ஜூன், 17 – 19 வரை விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

Advertisement