லாட்டரி சீட்டு  விற்றவர் கைது  

பெண்ணாடம், மே 23–

பெண்ணாடத்தில் லாட்டரி சீட்டுகள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் நேற்று காலை 9:30 மணியளவில் ரோந்து சென்றனர். அப்போது, பெண்ணாடம் பஸ் நிலையம் அருகே சந்தேகத்தின்பேரில் நின்றவரை பிடித்து விசாரித்தபோது, கொத்தட்டை, மேற்கு தெருவைச் சேர்ந்த உலகநாதன்,57, என்பதும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதும் தெரிந்தது.

உடன், போலீசார் வழக்குப் பதிந்து உலகநாதனை கைது செய்து, அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள், 100 ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

 

Advertisement