குறைந்த பரப்பளவு நிலத்தில் நெருக்கடி இல்லாமல் வீடு கட்டுவது அவசியம்!
அடுக்குமாடி வீடு வாங்க விருப்பம் இல்லை என்பதால், எப்படியாவது நிலம் வாங்கி சொந்தமாக தனி வீடு கட்ட வேண்டும் என்று பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர். ஆனால், சென்னை போன்ற நகரங்களில் நிலம் வாங்குவது என்பதே பெரிய சவாலாக அமைந்துள்ளது.
ஊரக பகுதிகளில், குறைந்தபட்சம் மூன்று முதல் ஐந்து சென்ட் வரை தான் குறைந்தபட்ச மனை அளவாக உள்ளது. ஆனால், சென்னை போன்ற நகரங்களில் சென்ட் கணக்கில் மனை வாங்க முடியாது என்பதால், சதுரடி அடிப்படையில் தான் மனை வாங்க முடியும்.
அதுவும் நகரின் பிரதான பகுதிகளை விடுத்து வெளியில், மிக குறைந்த பரப்பளவு நிலம் கிடைத்தால் போதும் என்று மக்கள் நினைக்கின்றனர். குறிப்பாக, 500 அல்லது, 600 சதுரடி நிலம் கிடைத்தால் கூட போதும் என்ற அடிப்படையில் மக்கள் வீடு கட்ட முடிவு செய்கின்றனர்.
சொந்தமாக வீடு கட்ட நினைப்பவர்கள், வீடு அதிக பரப்பளவில் விசாலமாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால், குறைந்த பரப்பளவு நிலத்தில் என்ன முடியுமோ அதன்படி மட்டுமே வீடு கட்ட முடியும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
வீட்டுக்கான மனை வாங்கும் போது, கட்டடம் கட்ட அனுமதிக்கப்படும் குறைந்தபட்ச பரப்பளவு என்ன என்பதை புரிந்து அதற்கு ஏற்ற பரப்பளவில் மனை வாங்க வேண்டும். இதன்படி, 840 சதுர அடி அதற்கு மேற்பட்ட பரப்பளவில் மனை வாங்கினால், அதில் வீடு கட்ட அனுமதி கிடைக்கும்.
ஆனால், குடும்பத்துக்குள் பங்கு பிரித்தல் போன்ற காரணங்களால், 500 அல்லது, 600 சதுரடி பரப்பளவு மனை பெற்றவர்கள் உரிய ஆதாரங்களை கொடுத்தால் அதில் கட்டட அனுமதி கிடைக்கும். இவ்வாறு, 500, 600 சதுரடி அளவு மனையில் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் வீடு கட்டமுடியுமா என்ற கேள்வி எழும்.
இது போன்ற குறைந்தபட்ச பரப்பளவு மனைகளில் வீடு கட்ட வேண்டும் என்றால், தரைதளம் மட்டுமல்லாது, முதல் தளத்துக்கும் சேர்த்து வரைபடம் தயாரித்தால் தான் சாதாரணமாக ஒரு குடும்பம் இயல்பான முறையில் வசிக்க முடியும்.
இந்த வகையில் தரைதளத்தில், வரவேற்பு அறை, சமையலறை, ஒரு படுக்கை அறை மட்டும் அமைக்கலாம். முதல் தளத்தில் ஒரு வரவேற்பு அறை, இரண்டு படுக்கை அறை, ஒவ்வொன்றிலும் அட்டாச்டு பாத்ரூம் போன்ற வசதிகளை ஏற்படுத்தலாம்.
இதன்படி திட்டமிட்டால், 500 சதுரடி நிலத்தில் மூன்று படுக்கை அறை வீட்டை எளிதாக கட்டலாம் என்று கூறப்படுகிறது. இதில் ஒவ்வொரு பாகத்தையும் மிக மிக துல்லியமாக கணக்கிட்டு வடிவமைத்தால் நெருக்கடி என்பதே தெரியாத அளவுக்கு உங்கள் புதிய வீடு அமையும் என்கின்றனர் கட்டட வடிவமைப்பாளர்கள்.
குறைந்த பரப்பளவு நிலத்தில், தரைதளம் முதல்தளம் என்ற அடிப்படையில் வடிவமைக்கும் போது, பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் வீட்டை பெறலாம்.
மேலும்
-
மோடிக்கு மசாலா பொரி கொடுத்த வியாபாரிக்கு கொலை மிரட்டல்; திரிணமுல் கட்சியினர் அட்டூழியம்
-
சீனாவில் துயர சம்பவம்; நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் 80 பேர் பலி
-
உ.பி.,யில் கொளுத்தும் வெயில்; டாப் 50 நகரங்களில் 31 இங்க தான்!
-
அமலாக்கத்துறையிடம் வசமாக சிக்கினார் இன்னொரு திமுக மாஜி!
-
கலிபோர்னியா தொழிற்சாலையில் ரசாயன கசிவு: 40 ஆயிரம் பேர் வெளியேற்றம்
-
ஜாதி பார்த்து முதல்வர் விஜய் வாய்ப்பளிக்கவில்லை; அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் பேட்டி