நெய், வெண்ணெய் விற்பனை மந்தம்

சென்னை, வெண்ணெய், நெய் விற்பனை மந்தமாக உள்ளதாகவும் மொத்த கொள்முதல் விலையில் வெண்ணெய் 8 சதவீதமும் நெய் 4 சதவீதமும் சரிந்துள்ளதாகவும் வெண்ணெய் மற்றும் நெய் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியை சேர்ந்த வெண்ணெய், நெய் உற்பத்தியாளர் பாலசுப்ரமணியன் கூறியதாவது:

ஊத்துக்குளியில் தினந்தோறும் 1.50 டன் நெய் மற்றும் வெண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. 2,000க்கும் மேற்பட்டோர் இந்த தொழில் சார்ந்து பயனடைந்து வருகின்றனர். இங்கிருந்து சென்னை, திருப்பூர் உள்ளிட்ட பல ஊர்களுக்கு அனுப்பப்படுகிறது. காஸ் தட்டுப்பாட்டால் ஹோட்டல்கள், நெய் மற்றும் வெண்ணெய் வாங்குவதை குறைத்தன. தற்போது திருமணங்கள், பண்டிகைகள் எதுவும் இல்லாதாது, பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை, கோடைக்கால நுகர்வு குறைவு ஆகிய காரணங்களால் பயன்பாடு குறைந்துள்ளது.

இதனால், வெண்ணெய் மற்றும் நெய் கொள்முதல் விலை சிறிய அளவில் குறைந்தது. இருப்பினும் சில்லரை விற்பனையில் சீரான விலை நீடிக்கும் நிலையில், நெய், வெண்ணெய் விற்பனை மந்தமாக உள்ளது. இன்னும் இரண்டு மாதங்களுக்கு இந்த நிலை நீடிக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு கூறினார்.

Advertisement