அச்சம் வேண்டாம்! அவிநாசி அருகே சிறுத்தை நடமாட்டம் இல்லை... ஆய்வு மேற்கொண்ட வனத்துறையினர் திட்டவட்டம்
அவிநாசி: அவிநாசி அருகே சிறுத்தை நடமாட்டம் ஏதுமில்லை என்று ஆய்வுக்குப்பின், வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். அவிநாசி அருகே பாப்பாங்குளம், ஈஸ்வரன் கோவில் வயக்காடு பகுதியில் சிறுத்தை உலா வருவதாக பொதுமக்கள் மத்தியில் தகவல் பரவியது. இதனால் அச்சமடைந்த நூற்றுக்கணக்கான கிராம மக்கள், நேற்று முன்தினம் இரவு ஈஸ்வரன் கோவில் வளாகத்தில் திரண்டனர்.
இதனையறிந்த, திருப்பூர் ரேஞ்சர் நித்யா மேற்பார்வையில், வனத்துறையினர் நேற்று முன்தினம் இரவும், நேற்று காலையும் அப்பகுதியில் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வு குறித்து ரேஞ்சர் கூறியதாவது:
பாப்பாங்குளம் கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக மக்கள் கூறியதைத் தொடர்ந்து, தீவிர கண்காணிப்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பொதுமக்கள் சுட்டிக்காட்டிய இடத்தில் இருந்தது சிறுத்தையின் கால்தடம் அல்ல; அது நாயின் கால்தடம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பொதுவாக வனப்பகுதியை விட்டு வெளியேறும் சிறுத்தை, ஓரிரு நாட்கள், குடியிருப்புப் பகுதியில் உலா வருகிறது என்றால், அதன் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய, அவை வரும் வழித்தடத்தில் உள்ள தோட்டம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள நாய், ஆடு, கோழி உள்ளிட்டவற்றை தாக்கும். சில நேரங்களில் பாதி இறைச்சியை உண்டு விட்டு, மீதியை அப்படியே விட்டுச் செல்லும்.
இதுபோன்ற அறிகுறிகள் எதுவும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்படுவதாக தெரியவில்லை. எனினும், பொதுமக்கள் தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இதுபோன்ற அறிகுறிகள், சந்தேகம் இருந்தால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்; தேவையற்ற பீதியை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.------
@block_B@ சிறுத்தை நடமாட்டம் கண்டறிவது எப்படி? சிறுத்தை கால்தடங்களில், நகங்களின் அடையாளங்கள் பதிவாகாது; நாய் அல்லது பிற விலங்குகளின் கால்தடங்களில் நகங்களின் புள்ளிகள் தெளிவாக தெரியும். சிறுத்தைகள் தாங்கள் வேட்டையாடிய விலங்குகளை மரங்களின் மீதோ அல்லது புதர்களுக்குள்ளோ மறைத்து வைத்து பாதுகாக்கும் குணம் கொண்டவை.சிறுத்தையின் எச்சத்தில், அது உண்ட விலங்குகளின் முடிகள் மற்றும் எலும்புத்துண்டுகள் காணப்படும். தங்கள் எல்லைகளை வரையறுக்க, சிறுத்தைகள் மரங்களின் பட்டைகளில் நகங்களால் ஆழமாகக் கீறி அடையாளமிடும். இதுபோன்ற அடையாளங்களை உறுதிப்படுத்திய பின்பே, அங்கு சிறுத்தை நடமாட்டம் உள்ளதா, இல்லையா என்பதை வனத்துறையினர் தெளிவுப்படுத்துவர். சில நேரங்களில் மிக அரிதாக இதையும் மீறி, குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் புகுந்துவிடும்.---block_B
@block_B@ பீதி கிளப்பும் பழைய சம்பவம்! பாப்பாங்குளத்தில், சிறுத்தை நடமாட்டம் இல்லை என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டாலும், கடந்த, 2022ம் ஆண்டு இதே பாப்பாங்குளம் கிராமத்தில் ஒரு சிறுத்தை புகுந்து, வனத்துறையினரின் கண்காணிப்பிலும், பொறியிலும் சிக்காமல் சில நாட்கள் கண்ணாமூச்சி காட்டியதுடன், சிலரை தாக்கவும் செய்தது. தற்போது சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கூறப்படும் பாப்பாங்குளம் சுற்றுவட்டர பகுதிக்கு, சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருந்து சிறுத்தைகள் வர வாய்ப்புள்ளது என கூறப்படுவதால், வனத்துறையினர் தொடர்ந்து அப்பகுதியில் ரோந்துப் பணி மேற்கொள்ள வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.block_B
@block_B@ விலங்குகள் 'விசிட்' ஏன்?வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள், சிறுத்தை போன்ற வனவிலங்குகள் நுழைவதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது.* கோடைக் காலத்தில் வனப்பகுதிக்குள், நீர்நிலைகள் வறண்டு போவதாலும், விலங்குகளுக்கான நீர், இரை பற்றாக்குறை ஏற்படுவதாலும் அவை சமவெளி பகுதிகளை நோக்கி நகர்கின்றன.* கிராமப்புறங்களில் உள்ள ஆடு, மாடு, கோழிகளை தாக்கி, அவற்றை இரையாக்கி கொள்கின்றன; குறிப்பாக, நாய்கள், சிறுத்தைகளுக்கு எளிதான இரையாக அமைகிறது.* காடுகளின் எல்லையை ஒட்டி நடக்கும் ஆக்கிரமிப்புகள் மற்றும் மனித நடமாட்டம், விலங்குகளின் வாழ்விட எல்லையைச் சுருக்குவதும், வாழ்விடம் இழந்த விலங்குகள், வழித்தடம் மாறி, குடியிருப்பு பகுதிகளை நோக்கி நகர்வதும் சில இடங்களில் நடக்கும்.block_B
மேலும்
-
கட்டுமான பகுதியில் கம்பி வளைப்புக்கு விடைகொடுங்கள்!
-
கட்டுமான பணியில் காணப்படும் தவறான நம்பிக்கைகள்!
-
கட்டடத்தின் மேல்தளத்தில் புதிய வகை 'ஸ்லாப்' அமைக்கலாம்!
-
புதிய வீடு கட்ட எந்த வகை ஒப்பந்தத்தை எப்படி தேர்வு செய்ய வேண்டும்?
-
வீடு கட்டுவதா வாங்குவதாl: குழப்பத்துக்கு தீர்வு என்ன?
-
குறைந்த பரப்பளவு நிலத்தில் நெருக்கடி இல்லாமல் வீடு கட்டுவது அவசியம்!