என் உழைப்பு வீண் போகவில்லை: 'யு டியூபர்' சவுக்கு சங்கர் பெருமிதம்
சென்னை: 'சென்னை கொளத்துார் தொகுதியில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தோல்வியை தழுவி இருப்பது, என் உழைப்பு வீண் போகவில்லை என்பதை காட்டுகிறது' என, 'யு டியூபர்' சவுக்கு சங்கர் தெரிவித்தார்.
குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தது திரும்ப பெறப்பட்டதால், சங்கர் நேற்று புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முதல்வர் விஜய்க்கும், நீதிமன்றங்களுக்கும் நன்றி. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், மக்கள் மிக சிறப்பான தீர்ப்பை வழங்கி உள்ளனர்.
இதை முதல்வர் விஜய் நன்கு புரிந்து, தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அவர் எல்லாவற்றையும் கூர்ந்து கவனிக்கிறார். ஊடகங்கள் சுட்டிக்காட்டும் குறைகள் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்கிறார்.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்து இருப்பதால், ஊடகங்களுக்கான ஜனநாயகம் ஆரோக்கியமானதாக இருக்கும் என, நம்புகிறேன். முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்யும்.
தி.மு.க.,வினர் நடத்திய கொடுங்கோல் ஆட்சிக்கு, மக்கள் முடிவு கட்டி உள்ளனர். கொளத்துார் தொகுதியில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தோல்வியை தழுவி இருப்பதால், என் உழைப்பு வீணாகிவிடுமோ என்ற அச்சம், பயம் நீங்கி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ஒரு அமைச்சர் பதவி கொடுத்தால் நல்லது. யு டியூபில் பதிவிடும் கடின உழைப்பை தமிழர் அனைவரும் மேற்கொள்ள வேண்டும்
2026 மார்ச் மாதம் வெளியான ச.சங்கரின் 10 வீடியோக்கள் மிகமிக தரம் வாய்ந்தவை... திமுகவை, ஸ்டாலினை பதம் பார்த்துவிட்டது. உங்க தரமான பணி நேர்மையாக செழிக்க வாழ்த்துக்கள்.
கலைஞர், மேதை, அறிஞர், நிர்வாகி என்று ஒரு காலத்தில் உருட்டி விட்டு, தனது குடும்பத்துக்கு நேரிட்ட இழப்பு இன்று திடீர் என்று ஞானோதயமாக வசனம் பேசுமளவுக்கு சவுக்கர் ஓரளவுக்கு மட்டும் திருந்தி இருக்கிறார். கம்முனிசமும், திராவிடமும் பிரிவினை வாதத்தை முன்னிறுத்தி செய்யப்படும் அடிப்படை வாதங்கள். சவுக்கர் இரண்டிலும் இருந்து வெளிவந்தால் ஒரு பண்பட்ட மனிதராக ஆகமுடியும்.
அரசியல்வாதிகளின் அதிகார துஷ்பிரயோகத்தை தடுக்கும் அரசியல் அமைப்பு முறை இருந்தால் அதிகாரிகள் நேர்மையாக செயல்படமுடியும் .குறைந்தபட்சம் எல்லா கட்சி அங்கத்தினர் கொண்ட மாநில அவை காவல் துறை கண்காணிப்பு குழு ஒன்று ஏற்படுத்தி கண்காணிக்கவும் ,தேவைப்பட்டால் காவல்துறை தலைமையின் குழுவிசாரணைக்குட்படுத்தவும் அமைந்திட்டால் காவல்துறை சரியாக பணிக்கும் .காவல்துறை சரியாக பணித்தால் அரசுக்கும் நற்பெயர் ஏற்படும் .
சரிதான் சார்.. இனிமேலாவது வாய் இருக்கிறது என்று தாறுமாறாக பேசாமல் இருந்தால் உடம்பு புண்ணாகாமல் இருக்கும்... என்னா பேச்சு... என்னா அடி
உங்கள் அர்ப்பணிப்பு முன்னாள் முதல்வர் சிறை சென்ற பின் தான் வெற்றி பெறும்.
தொட்டு பார் சீண்டி பார் என்று சவால் விட்ட சுடலைக்கு மக்கள் மட்டும் அல்ல அமித்ஷாவைன் சாணக்கிய தனமும் சேர்ந்து திருட்டு திமுகவின் பலம் கூட்டணி கட்சிகளே என்றறிந்து இன்று கூட்டணிகளை தவெகவின் மூலம் பிரித்து வரும் பாராளுமன்ற தேர்தலில் திருட்டு திமுகவுக்கு ஒரு எம்பி சீட்டு கூட கிடைக்காமல் செய்து விட்டார்.. இனி பிஜேபி தமிழகத்தில் அண்ணாமலை தலைமையில் மிக பெரிய வெற்றி பெரும்....
"கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் தோற்றிருப்பதுதான் தன் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி என்று சவுக்கு சங்கர் பெருமிதத்தோடு கூறியிருப்பது அவரது தனிப்பட்ட அரசியல் துணிச்சலைக் காட்டுகிறது. எத்தனை வழக்குகள், எத்தனை சிறைவாசம் வந்தாலும் அஞ்சாமல் நின்றவருக்கு இந்தத் தேர்தல் முடிவுகள் ஒரு பெரிய நிம்மதியைத் தந்திருக்கிறது. தவறு செய்யும் ஆட்சியாளர்களை ஊடகங்கள் தொடர்ந்து தட்டி கேட்க வேண்டும் என்பதற்கு இவர் ஒரு எதார்த்த உதாரணம்."
"திமுக ஆளுங்கட்சியாக இருந்தபோது தங்களுக்கு எதிராகப் பேசும் ஊடகவியலாளர்களையும், யூடியூபர்களையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து எப்படி பழிவாங்கினார்கள் என்பதை இந்த நாடே பார்த்தது. அதில் நேரடியாகப் பாதிக்கப்பட்ட சவுக்கு சங்கர் இன்று சிறையிலிருந்து வெளியே வந்து கொளத்தூர் தேர்தல் தோல்வியைச் சுட்டிக்காட்டிப் பேசியிருப்பது உண்மையான சவுக்கடி அதிகார மிரட்டல்களால் மக்களின் குரலையோ, உண்மைகளையோ என்றைக்கும் ஒடுக்கிவிட முடியாது என்பதற்கு இதுவே சாட்சி."
"ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது ஆட்டம் போட்டவர்களுக்கு, சவுக்கு சங்கர் போன்றவர்களின் தொடர் விமர்சனங்களும், மக்களின் தேர்தல் தீர்ப்பும் மிகச் சரியான பாடத்தைப் புகட்டியுள்ளது. நீதிமன்றங்களுக்கும், புதிய முதல்வர் விஜய்க்கும் அவர் நன்றி தெரிவித்திருப்பதுடன், புதிய கூட்டணியின் கீழ் ஊடகங்களுக்கும் ஜனநாயகத்திற்கும் ஆரோக்கியமான சூழல் இருக்கும் என்று நம்புவதாகக் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. இனிமாவது பழிவாங்கல் அரசியல் ஒழியட்டும்"மேலும்
-
கட்டுமான பகுதியில் கம்பி வளைப்புக்கு விடைகொடுங்கள்!
-
கட்டுமான பணியில் காணப்படும் தவறான நம்பிக்கைகள்!
-
கட்டடத்தின் மேல்தளத்தில் புதிய வகை 'ஸ்லாப்' அமைக்கலாம்!
-
புதிய வீடு கட்ட எந்த வகை ஒப்பந்தத்தை எப்படி தேர்வு செய்ய வேண்டும்?
-
வீடு கட்டுவதா வாங்குவதாl: குழப்பத்துக்கு தீர்வு என்ன?
-
குறைந்த பரப்பளவு நிலத்தில் நெருக்கடி இல்லாமல் வீடு கட்டுவது அவசியம்!