ஓட்டு போட்டவர்களுக்கும், மறந்தவர்களுக்கும் நன்றி

நெய்வேலி மே 23-: கடலுார் மேற்கு மா வட்டம், நெய்வேலி சட்டசபை தொகுதிக்குட்பட்ட, பண்ருட்டி வடக்கு ஒன்றியம், திருவாரூர் எலந்தம்பட்டு, திருவத்துார் எஸ்.எரிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் எம்.எல்.ஏ., சபா இராசேந்திரன் நன்றி தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது:

எனக்கு ஆதரவாக ஓட்டு போட்ட வாக்காளர்களுக்கும் ஓட்டு போட மறந்தவர்களுக்கும் நன்றி. தி.மு.க., பார்க்காத வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை.

வெற்றியிலும் தோல்வியிலும் மக்களுடன் உறுதியாக நின்ற கட்சி இது. எனவே, எப்போதும் பொதுமக்களுக்கு உதவ நான் காத்திருக்கிறேன்.

உங்களுக்கு எந்த உதவி தேவையானாலும் நேரடியாகவோ அல்லது நமது நிர்வாகிகள் மூலமாகவோ என்னை தொடர்பு கொள்ளலாம். உங்களுக்காக நான் எப்போதும் உள்ளேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் பண்ருட்டி ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன், ஒன்றிய செயலாளர்கள் சந்தோஷ் குமார், குணசேகரன், ஒன்றிய அவைத் தலைவர்கள் ராஜா, சிவகுமார், மாவட்டப் பிரதிநிதி பூபாலன், ராஜசேகர், மாசிலாமணி, அருள்ஜோதி ஜெகஜீவன்ராம், முன்னாள் கவுன்சிலர் தேவராஜ் இளைஞரணி அமைப்பாளர் அன்பரசன், கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ஞானசேகர், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் உத்தமன், திருமலை செல்வம், ஆனந்த் செல்வராஜ், சடையப்பன் உள்ளிட்ட திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Advertisement