சனாதனத்தை அறிந்து கொள்ளுங்கள்: உதயநிதிக்கு ஸ்ரீதர் வேம்பு அறிவுரை
சென்னை: தர்மம் என்ற தமிழ் வார்த்தையின் அர்த்தம் என்ன என்பதை ஆராயுமாறு உதயநிதிக்கு ஸோகோ நிறுவனத்தின் ஸ்ரீதர் வேம்பு அறிவுறுத்தி உள்ளார்.
சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி தோல்வியடைந்ததால், அந்த
கூட்டணியில் இருந்த காங்கிரஸ், தவெகவுக்கு ஆதரவளித்து, ஆட்சியிலும் பங்கு எடுத்துள்ளது. இதனால், கடும் அதிருப்தியடைந்த திமுக, காங்கிரசை கடுமையாக விமர்சித்து வருகிறது.
சென்னையில் நடந்த திமுக இளைஞர் அணி ஆலோசனை கூட்டத்திலும், "அடுத்தவர் உழைப்பில் ஒட்டுண்ணயாய் உண்டு கொழுப்பதும், தன் தேவைக்கேற்ப கொள்கை மறந்து துரோகம் புரிவதும் காங்கிரசுக்குப் புதிதில்லைதான்.
சொந்த உழைப்பில் ஒருநாளும் வெற்றி பெற முடியாமல், நம்பியவர்களுக்கு எல்லாம் துரோகமிழைக்கும் அறமில்லாத காங்கிரஸ் கட்சிக்கு வன்மையான கண் டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக தினமலர் நாளிதழில் வெளியான செய்தியை மேற்கோள் காட்டி உதயநிதிக்கு ஸோகோ நிறுவனத்தின் ஸ்ரீதர் வேம்பு அறிவுறுத்தி உள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது: திமுக, காங்கிரஸ் கட்சியை தர்மம் இல்லாத காங்கிரஸ் கட்சி என்று அழைக்கிறது. இதன் பொருள் "தர்மம் இல்லாத காங்கிரஸ் கட்சி" அல்லது "தர்மம் அற்ற காங்கிரஸ் கட்சி" என்பதாகும்.
இந்த தர்மம் என்ற தமிழ் வார்த்தையின் அர்த்தம் என்ன என்பதை ஆராயுமாறு உதயநிதியை நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
அவருக்கு ஒருவேளை தெளிவு கிடைக்கலாம். செவ்வியல் தமிழ் இலக்கியம் அனைத்திலும் பரவியிருக்கும் சனாதன தர்மத்தின் மதிப்பையும் அவர் உணரக்கூடும். தர்மம் வெல்லும். இவ்வாறு ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.
உங்களுக்குத் தான் நல்லா தெரியுமே காங்கிரஸைப் பற்றிய விஷயங்கள். அப்புறம், எதுக்கு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தீர்கள்? அவர்கள் தான் துரோகம் செய்கிறார்கள் என்று தெரியும் இல்லையா உங்களுக்கு? அப்புறம், எதுக்கு அவர்களோடு கூட்டணி எதற்கு வைத்தீர்கள் சொல்லுங்கள்.
அவர்கள் தான் அப்பவே விஜய் கூடப் போறேன், போறேன் என்று சொன்னார்கள். நீங்கள் தான் ராகுல் கால்ல விழுந்து போயிராதீர்கள், போயிராதீர்கள், "இருங்க எங்களுடைய கூட்டணியில் இருங்க" என்று சொல்லி அமுக்கி போட்டீர்கள். இப்ப வந்து குத்துது, கொடையுது என்றால் என்ன அர்த்தம் சொல்லுங்க?
இதுல ஸ்ரீதர் வேம்பு வேற உதயநிதி அறிவுரை கூறுகிறார் எதுக்கு அதெல்லாம் தேவையில்லாத வேலை ஸ்ரீதர் வேம்பு அதாவது, சனாதனத்தைப் பற்றி தெரியவில்லை என்றால், சொல்லிக் கொடுக்கலாம் இவங்க எல்லாருக்குமே "சனாதனம்" என்ன என்று தெரியும்.
ஆனா அவர்கள் நடிக்கிறார்கள் அவர்களுக்கு நன்றாகத் தெரியும் "சனாதனம்" என்னவென்று எப்போதுமே. எதையாவது ஒழிக்க வேண்டும். தேவையில்லை என்று சொன்னால், அவர்களுக்குத்தான் அதிகமாக தேவைப்படுகிறது என்று அர்த்தம் உனக்குதான் சனாதனம் பிடிக்காது. அப்புறம்? ஏன் தேர்தல் பிரச்சாரத்தில் கோவிலுக்குப் போக வேண்டும்?மாலை போட்டுக்கிட்டு, விபூதி பூசிக்கிட்டு, ஏன் ஊரெல்லாம் ஏமாத்தணும்?.
சனாதனமே உதயநிதி உங்க வீட்ல தான் தொடங்குது உதாரணமா, உங்க அம்மா எல்லா கோவிலுக்கும் போறது வேண்டாத தெய்வமே இல்ல, செய்யாத பூஜையே இல்ல அப்படி பூஜை எல்லாம் செஞ்சுதான் ஸ்டாலின் முதலமைச்சரா வந்தாரு இவை எல்லாமே சனாதானத்தோட தாக்கம் தான்.
எப்போதுமே கடவுள் பக்தி இருக்கிறவன் ஒருதடவ சாமியை கும்பிட்டுட்டு விட்டுருவான் கடவுள் இல்ல, சனாதனத்தை ஒழிக்கணும் அப்படிங்கிறவன் மட்டும்தான் இருபத்தி நாலு மணி நேரமும் அதையே நினைச்சுக்கிட்டு இருப்பான்ஆனா இவனுங்களுக்கு எல்லாம் கடவுள் அள்ளி அள்ளி கொடுப்பார்.
ஆனா முக்கியமான நேரத்துல ஒரு பெரிய தார்ப்பாய எடுத்துப் போட்டு மூடிடுவாரு எப்படி இந்தத் தேர்தலில் நீங்கத் தோத்து போனீங்க? அது சனாதனத்தோட Effect.
இப்ப புரியுதா உங்களுக்கு? சனாதனம் வேணுமா, வேண்டாமான்னு உனக்குப் பிடிக்கலைன்னா ஒதுங்கி போவ அதை ஒழிப்பேன், அழிப்பேன் அப்படின்னு சொன்னா, நீ தான் அழிஞ்சு போவ,
தோ பார்ரா.. தர்மம் தமிழ்ச் சொல்லாம்.
ஒரு சாமானியன் கூட உணவு உடை இருப்பிடத்திற்குக் கஷ்டப்படக் கூடாது என்பதே சனாதன தர்மம்.கும்பமேளா துப்புறவுப் பணிப் புரிந்தோர்க்கு நிதி உதவி அளித்து அவர்களுடன் அமர்ந்து திரு யோகி உணவு உண்டு இது தான் நம் சனாதன தர்மம் என்றார்,..திமுகவின் சரிவுக்குக் காரணம் ஊழல் அறியாமை வெறுப்பு.
இவரிடம் இதை பற்றி பேசுவது செவிடன் காதில் சங்கு ஊதிய கதைதான். பேசுவதில் எந்தப் பயனும் இல்லை. நல்ல நல்ல நூட்களை படித்தவர்கள் இப்படியெல்லாம் மிகக் கேவலமாக நடந்துக் கொள்ள மாட்டார்கள. சநாதனமென்றால் இந்து. நாம் பிறப்பால் ஹிந்து. இருக்கின்ற மதங்களிலே மரியாதைக்குறிய மதம். நம் ஹிந்துமதம் சகிப்புத் தன்மையும் புரிந்துணர்வும் கொண்டமதமென்று நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவர்களுக்குத்தான் இன்னும் புரியவில்லை. ஆனால் இவரோ அதை ஒழித்துக் கட்டுவேன் அதுவும் இந்திய மண்ணில் சட்டசபை கூட்டத் தொடரில் கூச்சலிட்டுச் சொல்லுகின்றார் . அவரின் இந்த அநாகரீக பேச்சால் நம் மக்களின் நெஞ்சங்கள் நிறைய காயப்பட்டுள்ளன. அதையும் நம் மக்கள் கேட்டும் தெரிந்தும் சும்மாதான் இருக்கின்றனர். மீண்டும் அவரையே தேர்ந்தெடுத்து உள்ளனர். ஏனென்று இன்னும் புரியவில்லை. இது நல்ல செயலாக தெரியவில்லை. அறியாமையா
சனாதனம் என்றால் என்ன? chatgpt பதில்
சனாதனம் (Sanātanam / सनातन) என்பது சமஸ்கிருதச் சொல்.
இதன் அடிப்படை அர்த்தம்:
நித்தியமானது
என்றும் நிலைத்திருப்பது
ஆரம்பமும் முடிவும் இல்லாதது
காலத்தால் அழியாத உண்மை
என்பதாகும்.
இந்தச் சொல் பொதுவாக “சனாதன தர்மம்” என்ற வடிவில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
அதாவது:
> “எல்லா காலங்களிலும் பொருந்தக்கூடிய நெறி அல்லது தர்மம்”
என்று பொருள் கொள்ளப்படுகிறது.
சனாதன தர்மம் குறிக்கும் கருத்துகள்
பல பாரம்பரிய இந்து சிந்தனைகளில், சனாதனம் என்பது:
உயிர்கள் அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடையவை
தர்மம் (நல்லொழுக்கு) முக்கியம்
கர்மா மற்றும் பிறவி
உண்மை, அன்பு, கருணை
இயற்கையோடு ஒற்றுமை
ஆன்மீக முன்னேற்றம்
போன்ற நிலையான வாழ்வியல் கொள்கைகளை குறிக்கிறது.
“சனாதனம் = இந்து மதமா?”
பலர் “சனாதன தர்மம்” என்பதை இந்து மதத்தின் பாரம்பரிய பெயராகக் கருதுகிறார்கள். ஆனால் சில அறிஞர்கள் அதை ஒரு குறிப்பிட்ட மதத்தை விட:
வாழ்க்கை நெறி,
ஆன்மீகப் பாதை,
மனித ஒழுக்க முறை
என்ற பரந்த பொருளில் விளக்குகின்றனர்.
இன்றைய விவாதங்கள்
“சனாதனம்” என்ற சொல்லைச் சுற்றி சமூக, அரசியல், சமத்துவம், சாதி போன்ற விஷயங்களில் பல்வேறு கருத்துக்கள் உள்ளன.
சிலர் அதை உயர்ந்த ஆன்மீக மரபாகப் பார்ப்பார்கள்
மற்றவர்கள் பழைய சமூக அமைப்புகளுடன் இணைத்து விமர்சிப்பார்கள்.
அதனால், “சனாதனம்” என்ற சொல்லின் பொருள் ஒருவர் பார்க்கும் பார்வை, மரபு, தத்துவம் ஆகியவற்றைப் பொறுத்து மாறக்கூடும்.
திக திமுக இரண்டுமே ஒரு நாளும் இந்த மண்ணின் ஆன்மீக நம்பிக்கை குறித்து உயர்ந்த எண்ணம் கொண்டதில்லை
ஆகவே இவர்களுக்கு ஆலோசனை சொல்வது வீண்
சனாதனத்தை பற்றி வேம்பூ சார் விளக்கம் கொடுக்கலாமே ?? பிறப்பால் பெறப்படும் பதவி க்கு பெயர்தான் சனாதனம் .....அதாவது உதயநிதிக்கு கிடைத்திருக்கும் பதவிக்கு பெயர்
வீம்பு வம்பு செய்யும் மதவாத கும்பல் பெருகிவிட்டது
தெரியாதவனுக்கு வேண்டுமானால் தெரியவைக்கலாம். ஆனால் வேண்டும் என்றே தெரிந்து கொள்ள மறுப்பவன் புரிந்தும் புரியாத மாதிரி நடிப்பவனை என்ன செய்யலாம்..ரஷ்ய சர்வாதிகாரி ஜோசஃப் ஸ்டாலின் செய்தது/ சொன்னது போல, அடித்து உதைத்து தெரிந்து கொள்ள வைக்கலாம்.. அல்லது புரிந்து கொள்ளும் வரை அடித்து உதைக்கலாம்.வன்முறையை வளப்பவர்களுக்கு அதே வன்முறை மூலமாகவே புத்தி புகட்ட வேண்டும் தானே?
They wont do it. If the try to analyse and understand, they will lose their vote bank. Its a pure vote bank and appeasement politicsமேலும்
-
சந்தை நிலவரம்
-
எம்.எல்.ஏ., எண்ணிக்கையை அதிகரிக்க பா.ஜ., பாணியில் களமிறங்கிய த.வெ.க.,
-
ரூபாய், பத்திர சந்தைகளுக்கு கிடைத்த தற்காலிக நிம்மதி
-
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் எண்ணெய் நிறுவன பங்குகள் ஏற்றம்
-
பிளஸ் 2 தேர்வில் 547 மதிப்பெண்: மாற்றுத்திறனாளி மாணவி அசத்தல்! மேற்படிப்புக்கு அரசு உதவ கோரிக்கை
-
சந்தை படிப்படியாக பலம் பெற்று வருகிறது