ரூபாய், பத்திர சந்தைகளுக்கு கிடைத்த தற்காலிக நிம்மதி
அ மெரிக்கா - ஈரான் அமைதி பேச்சுவார்த்தை சாதகமாக நகர்வதாலும், ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பாலும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது. இது, இந்திய ரூபாய் மற்றும் கடன் பத்திர சந்தைகளுக்கு தற்காலிக நிம்மதியை தந்துள்ளது.
கடந்த வாரம் ரூபாய் மதிப்பு 96.96 என்ற இதுவரை இல்லாத வீழ்ச்சியை சந்தித்த நிலையில், ரிசர்வ் வங்கியின் தலையீடு மற்றும் கச்சா எண்ணெய் விலை சரிந்ததால் நேற்று 95.26ஆக மீட்சியடைந்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும் இந்திய ரூபாய் மதிப்பு மீட்சி ஆகிய சாதகமான சூழலால், இந்திய அரசு பத்திரங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.இதனால், 10 ஆண்டுகால அரசு பத்திரங்களின் மதிப்பு அதிகரித்து, அதற்கான வட்டி 7.02 சதவீதமாக குறைந்துள்ளது.
இதற்கிடையில், வங்கி அமைப்பில் பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், ரூபாய் மதிப்பை நிலைநிறுத்தவும் இன்று ரிசர்வ் வங்கி 5 பில்லியன் டாலர் அதாவது, 47,500 கோடி ரூபாய் மதிப்பிலான ஏலத்தை நடத்துகிறது.
@block_B@ கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உலகளாவிய நிதி நிச்சயமற்ற தன்மை சவாலாக இருந்தாலும், இந்தியாவின் உள்நாட்டு தேவை, சேவைகள் ஏற்றுமதி, வலுவான அன்னிய செலாவணி இருப்பு மற்றும் 2025 - 26ல் கிடைத்துள்ள வரலாற்று சாதனை அளவிலான அன்னிய நேரடி முதலீடு ஆகியவை இந்திய பொருளாதாரத்திற்கு பாதுகாப்பு அரணாக விளங்குகின்றன. கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள்ளும், உலகளாவிய சந்தை சாதகமாகவும் நீடித்தால், வரும் நாட்களில் ரூபாய் மதிப்பு படிப்படியாக 94.80 - 94.50 என்ற வலுவான நிலையை நோக்கி முன்னேற அதிக வாய்ப்புள்ளது. - அமித் பபாரி, நிர்வாக இயக்குநர் சி.ஆர்.போரக்ஸ் அட்வைசர்ஸ்block_B
மேலும்
-
வையாவூர் ராஜகுளம் சாலையில் குதிரைக்கால் மடுவு பாலப் பணி விறுவிறு
-
ஆண்டிபட்டியில் குடிநீர் பிரச்னை புதிய போர்வெல் அமைக்க நிதி இல்லை
-
டாஸ்மாக் கடைகள், பார்கள் முடிந்து மூடியதை போட்டோ எடுக்கும் பணிகள் போலீசார் மனக்குமுறல்
-
ஸ்ரீபெரும்புதுார் எம்.எல்.ஏ., அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த த.வெ.க., ஒன்றிய செயலர்
-
ஓட ஓட விரட்டி இளைஞருக்கு வெட்டு பட்டப்பகலில் மதுராந்தகத்தில் பயங்கரம்
-
சேத்துாரில் காற்றில் சாய்ந்த நெற்பயிர்கள்