பெட்ரோல், டீசல் விலை உயர்வால் எண்ணெய் நிறுவன பங்குகள் ஏற்றம்

இ ந்திய பங்கு சந்தைகள் கணிசமாக உயர்வதற்கு எண்ணெய் நிறுவன பங்குகளும் முக்கிய காரணமாகின. நேற்றைய வர்த்தகத்தில் பொதுத்துறை எண்ணெய் நிறுவன பங்குகளின் விலை 6 சதவீதம் வரை அதிகரித்ததால் முதலீட்டாளர்கள் சற்று நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இரண்டு வார குறைவான நிலைக்கு சரிந்ததோடு, உள்நாட்டில் கடந்த 10 நாட்களில், 4வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது, எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்களான 'ஐ.ஓ.சி.எல்., பி.பி.சி.எல்., ஹெச்.பி.சி.எல்.,' ஆகிய நிறுவன பங்குகள் உயர்வதற்கு வழிவகுத்தன.

இந்த உயர்வால், மே மாதத்தில் இந்த பங்குகள் சாதகமான நிலைக்கு திரும்பியுள்ளன. தொடர்ந்து, 2வது மாதமாக மாதாந்திர அடிப்படையில் லாபத்தில் முடிவடைய தயாராகியும் வருகின்றன. இருப்பினும், நடப்பு 2026ம் ஆண்டில் இதுவரை இப்பங்குகள் 13 முதல் 20 சதவீதம் வரை சரிவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

@block_B@ உலக அரசியல் நகர்வுகளை கவனிக்க வேண்டும் மத்திய கிழக்கு நாடுகளின் பதற்றம் முழுமையாக தணிந்து, கச்சா எண்ணெய் விலை 95 டாலருக்கு கீழ் நிலையாக நீடித்தால் மட்டுமே இந்த நிறுவனங்களின் லாப வரம்பு சீராகும் என நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போதைய விலை உயர்வு மற்றும் கச்சா எண்ணெய் சரிவு தற்காலிக நிம்மதியை தந்துள்ளது. எனவே, முதலீட்டாளர்கள் உலக அரசியல் நகர்வுகளையும், அரசின் அடுத்தகட்ட விலை திருத்தங்களையும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என கூறுகின்றனர்.block_B

Advertisement