எம்.எல்.ஏ., எண்ணிக்கையை அதிகரிக்க பா.ஜ., பாணியில் களமிறங்கிய த.வெ.க.,
சென்னை: கர்நாடகா, ம.பி., உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ., செய்தது போல், எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, தமிழக வெற்றிக் கழகம் அதிரடியாக களமிறங்கியுள்ளது .
முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க., அரசுக்கு ஆதரவளித்த அ.தி.மு.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களில் மூன்று பேர், நேற்று பதவியை ராஜினாமா செய்து விட்டு, த.வெ.க.,வில் இணைந்துள்ளனர். ஏற்கனவே, முதல்வர் விஜய் ராஜினாமா செய்ததால், காலியாக உள்ள திருச்சி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது.
அத்துடன் மேலும் பல தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை வர வைத்து, த.வெ.க., எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கையை அதிகரிக்க, அக்கட்சி திட்டம் தீட்டியுள்ளதாக கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதி தான், மூன்று எம்.எல்.ஏ.,க்களின் ராஜினாமா என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட் டியுள்ளன.
மத்தியில் நீண்ட காலம் ஆட்சியிலிருந்த காங்கிரஸ், எதிர்க்கட்சி ஆளும் மாநில அரசுகளை பலமுறை கவிழ்த்து இருக்கிறது. கட்சி தாவல் தடைச்சட்டம் அமலுக்கு வந்த பின், மூன்றில் இரு பங்கு எம்.எல்.ஏ.,க்கள் இருந்தால் தான் கட்சி மாற முடியும் என்ற நிலை வந்தது.
இதனால், எம்.எ ல்.ஏ.,க்களை ராஜினாமா செய்ய வைக்கும் வழி தொடங்கியது. கடந்த 2019ல் கர்நாடகாவில், காங்., -- எம்.எல்.ஏ.,க்கள் 17 பேர் ராஜினாமா செய்து விட்டு, பா.ஜ.,வில் இணைந்தனர். இதனால், காங்., ஆதரவில் முதல்வராக இருந்த குமாரசாமி ஆட்சி கவிழ்ந்து, எடியூரப்பா தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்தது.
இதுபோல, கடந்த 2020ல் ம.பி.,யில், 22 காங்., -- எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்து பா.ஜ.,வில் இணைந்ததால், கமல்நாத் தலைமையிலான காங்., அரசு கவிழ்ந்து, பா.ஜ., ஆட்சிக்கு வந்தது. இடைத்தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்று, எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கையை அதிகரித்து கொண்டது.
மத்தியில் அதிகாரத்தில் இருக் கும் கட்சிகள் செய்து வந்ததை, மாநிலத்தில் அதிகாரத்தில் இருக்கும் த.வெ.க.,வும் தொடங்கி இருப்பது, கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள் ளது.
மேலும்
-
சேத்துாரில் காற்றில் சாய்ந்த நெற்பயிர்கள்
-
சேதமடைந்த சமுதாயக்கூடங்களை அகற்ற , ஏழைகள் பயன் பெற புதியதாக கட்டுவதற்கு எதிர்பார்ப்பு
-
உயர் அதிகாரிகளுக்கு இனி மின்சார வாகனங்கள் புதிய மாற்றம் ! லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா அதிரடி உத்தரவு
-
ஈரானுடன் நிரந்தர போர் நிறுத்தம் வருமா-? குறைந்து வரும் உலக நாடுகளின் நம்பிக்கை!
-
சாலை வளைவில் விபத்தை தடுக்க இரும்பு தடுப்பு அமைக்க கோரிக்கை
-
சந்தை துளிகள்