'ஹீட் ஸ்ட்ரோக்' அபாயம் ; மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
புதுடில்லி: கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில்; நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோடை வெயிலின் தாக்கத்தினால் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பல சிரமங்களும் அதிகரித்து வருகின்றன. பொதுமக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். வெளியில் செல்லும்போது எப்போதும் தண்ணீரை உடன் எடுத்துச் செல்லுங்கள், உடல் வறண்டு விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
அதிகப்படியான வெப்பத்தால் ஏற்படும் தலைச்சுற்றல், வாந்தி அல்லது கடுமையான சோர்வு போன்ற எந்தவொரு அசவுகரியத்தையும் அலட்சியப்படுத்த வேண்டாம். இந்த சுட்டெரிக்கும் வெயிலில் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் வெயிலில் வேலை செய்பவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சரியான நேரத்தில் கவனிக்காவிட்டால், 'ஹீட் ஸ்ட்ரோக்' போன்ற கடுமையான பாதிப்புகள் ஏற்படும்.
இந்தக் கொளுத்தும் வெயிலில், விலங்குகளையும் பறவைகளையும் நாம் மறந்துவிடக் கூடாது. நமது வீட்டு மொட்டை மாடிகள், கடைகள் அல்லது அலுவலகங்களுக்கு வெளியே தண்ணீர் நிரப்பிய சிறிய பாத்திரங்களை வைப்பது, தாகத்தால் தவிக்கும் பறவைகளின் வாழ்வாதாரமாக மாறும். இந்த இக்கட்டான நாட்களில், அனைவரும் முழு மனிதாபிமானத்தோடும், இரக்கத்தோடும் ஒருவரையொருவர் கவனித்துக் கொள்வோம், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வாசகர் கருத்து (12)
தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU,இந்தியா
27 மே,2026 - 14:46 Report Abuse
பாஜக ஆட்சியாலதான் ஹீட் ஸ்ட்ரோக் அபாயம் .... காங்கிரஸ், கம்யூனிஸ்ட், டிவிகே கூட்டறிக்கை ..... 0
0
Reply
விருமாண்டி - Benaras,இந்தியா
27 மே,2026 - 14:21 Report Abuse
ஹீட் ஸ்ட்ரோக் அபாயத்திலிருந்து தப்பிக்க, எல்லாரும் ஏசி பங்களாவில் இருந்து ஏசி காரில் ஏறி சொகுசு விமானத்தில் ஏறி சுவிட்சர்லாந்த் போய்விடலாமே? 0
0
vivek - ,
27 மே,2026 - 14:48Report Abuse
விருமாண்டி குடும்பத்துக்கு டாஸ்மாக் இருப்பதால் கவலை இல்லை 0
0
Reply
இறைவி - ,
27 மே,2026 - 14:13 Report Abuse
நம்முடைய பொய்கள் சமுதாயத்தில் நன்மைகளை உண்டாக்க விட்டாலும் தீமைகள் உண்டாக்காமல் இருக்க வேண்டும் என்ற நற்சிந்தனைகள் இல்லாமலா ஒரு கும்பல் வாழ முடியும். பாதிக்கப் பட்டு குணமடைந்தவர்கள் 426 லட்சம். மரணித்தவர்கள் 5.34 லட்சம். இது உலக சுகாதாரத்தின் வெளியீடு. 0
0
Reply
Nathansamwi - Gobichettipalayam,இந்தியா
27 மே,2026 - 13:59 Report Abuse
பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் 0
0
vivek - ,
27 மே,2026 - 14:50Report Abuse
நாதன் கூட கூலிங் சோமபானம் பருகலாம் 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
27 மே,2026 - 13:01 Report Abuse
பெற்றவர்கள் கூட இந்த அளவுக்கு அவர்கள் பெற்ற மக்களிடம் இந்த அளவுக்கு கருணை காட்டமாட்டார்கள். மோடிஜி இந்திய மக்கள் அனைவரையும் எந்தவித பாகுபாடுமின்றி தன்மக்கள் போல கருதி இப்படி அறிவுரை கூறுகிறார். வாழ்க அவர் பல்லாண்டு சீரும் சிறப்புமாக. 0
0
Reply
mainapproach - ,இந்தியா
27 மே,2026 - 12:54 Report Abuse
வெப்பம் இடமாக யார் காரணம், நூறு சதவிகிதம்.... நாம் ? இல்லையா பிரதம மந்திரி அவர்களே. தப்பை நம் மேல் வைத்துக்கொண்டு இயற்கையின் மேல் பழியை போடுவது ஏற்றுக்கொள்ள முடியாது. 0
0
விருமாண்டி - Benaras,இந்தியா
27 மே,2026 - 14:23Report Abuse
வயதாவதால் தான் இப்படி அதிகப்படியாக சூடும், குளிரும் தெரிகிறது என்று கண்டுபிடிச்சிருக்கார். 0
0
Reply
Tamilan - ,இந்தியா
27 மே,2026 - 12:50 Report Abuse
உலகமெல்லாம் அப்படிதான் இருக்கிறது. இதன் பெருமை மோடி அரசின் உலகமயமாக்களுக்குத்தான் சேரும் 0
0
Reply
Govi - ,
27 மே,2026 - 12:44 Report Abuse
ஏற்க தக்க அறிவுரை 0
0
Reply
Tamilan - ,இந்தியா
27 மே,2026 - 12:43 Report Abuse
ஏற்கனவே இவர்களுக்கு ஒட்டு போட்டவர்கள், மக்கள் அனைவரும் பயந்து போய்தான் இருக்கிறார்கள். கொரோனாவில் ஒருகோடிப்பேர் . இனியும் பயப்பட என்ன உள்ளது ? 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement