தேர்தல் அறிக்கை தயாரிக்கும்  குழுவில் தமிழருக்கு இடம்

பெங்களூரு: ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையத்திற்கு உட்பட்ட, 5 மாநகராட்சிகளுக்கு, ஆகஸ்ட் மாதத்திற்குள் தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து, கட்சிகள் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் மும்முரமாக களம் இறங்கி உள்ளன.

ஐந்து மாநகராட்சிகளுக்கும் தேர்தல் அறிக்கை தயாரிக்க, காங்கிரஸ் தனி, தனி குழுவை அமைத்து உள்ளது. சென்ட்ரல் மாநகராட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவுக்கு, சிவாஜிநகர் எம்.எல்.ஏ., ரிஸ்வான் அர்ஷத் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இந்த குழுவில் காந்தி நகர் வார்டு பிளாக் காங்கிரஸ் தலைவரும், தமிழருமான சரவணாவுக்கு இடம் கிடைத்து உள்ளது. அவர், குழு உறுப்பினர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

Advertisement