சாரப்பண்ணை ஓடையில் கட்டுமானம்மாநகராட்சிக்கு விவசாயிகள் கண்டனம்

கோவை: பேரூர் தாலுகா சுண்டக்காமுத்துார் கிராமம் குனியமுத்துார் வாய்க்கால் சாரப்பண்ணை ஓடையில், கோவை மாநகராட்சி ராட்சத தண்ணீர் தொட்டி கட்டியது.

அதில் தண்ணீர் நிரப்பி குழாய் பதித்து சுண்டக்காமுத்துார் குட்டைக்கு நீரேற்றம் செய்ய போவதாக மாநகராட்சி  சொல்கிறது. ஆனால், விவசாயிகள் அதை நம்பவில்லை.

”ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கும் அங்குள்ள குடியிருப்புகளுக்கும் தண்ணீர் கொண்டு செல்வதற்காக இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் பேரூர் பெரியகுளம் மற்றும் செங்குள பாசனத்தை நம்பி உள்ள ஏராளமான  நன்செய் நிலங்கள் பாதிக்கப்படும். சுண்டக்காமுத்துார் குட்டைக்கு மலையிலிருந்து வரும் ஓடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினாலே போதும். நீரேற்றம் தேவையே இல்லை” என்கின்றனர். 

பலமுறை மனு கொடுத்தும் பலன் இல்லை. தமிழக அரசு தலையிட வேண்டும் என்று கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க பொதுசெயலாளர் கந்தசாமி  கலெக்டரிடம் மீண்டும் மனு அளித்துள்ளார்.

Advertisement