வி.சி.க., சார்பில் ஆர்ப்பாட்டம்

கரூர்:கரூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், மண்டல துணை செயலாளர் புகழேந்தி தலைமையில், மனோகரா கார்னரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதில், பெரம்பலுார் மாவட்டம், குன்னம் பகுதியில் வி.சி.க.,வினர் மீது தாக்குதல் நடத்திய தி.மு.க.,வினரை கண்டித்தும், அவர்கள் மீது, காவல் துறை நடவடிக்கை எடுக்ககோரியும் கோஷம் எழுப்பப்பட்டது.


ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட பொருளாளர் சதீஷ், செய்தி தொடர்பாளர் மகாமுனி, முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெயராமன், நிர்வாகிகள் ஜெகதீசன், கார்த்திபன், செல்வராஜ், ஆனந்தராஜ், சுரேந்தர் உள்பட பலர்
பங்கேற்றனர்.

Advertisement