நெய்வாசல் தார் சாலையை சீரமைக்க கோரிக்கை

திட்டக்குடி: குண்டும் குழியுமான நெய்வாசல் தார் சாலையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திட்டக்குடி அடுத்த நெய்வாசல் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள ஆவினங்குடி செல்லும் தார் சாலையை பயன்படுத்தி, கிராம மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைக்கு திட்டக்குடி, விருத்தாசலம் உட்பட பல பகுதிகளுக்கு செல்கின்றனர்.

இச்சாலை பல ஆண்டுகளாக சீரமைக்காததால், ஜல்லிகள் பெயர்ந்து செம்மண் சாலையாகவும், ஆங்காங்கே குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலைக்கு மாறி உள்ளது.

இதனால், இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதியடைகின்றனர். மேலும், அவசர தேவைகளுக்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் செல்வதில் சிரமம் உள்ளது.

எனவே, குண்டும் குழியுமான நெய்வாசல் தார் சாலையை சீரமைக்க ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement