மத்திய அரசை கண்டித்து மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

பெண்ணாடம்: பெண்ணாடத்தில், மத்திய அரசை கண்டித்து, மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பழைய பஸ் நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வட்ட செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாதவன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் பரமசிவம், அரவிந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.

இதில், கேரளா மாநில முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்த விவகாரத்தில், மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Advertisement