மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு
விருத்தாலம்: குடிப்பதற்கு பணம் தர மறுத்த மனைவியை தாக்கி, கொலைமிரட்டல் விடுத்த கணவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
விருத்தாசலம் அடுத்த காணாதுகண்டான் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ், 38; இவரது மனைவி இந்துமதி, 32; இருவரும் கடந்த 7 ம் தேதி தங்கள் முந்திரி தோப்பில் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, சுரேஷ் தனது மனைவி இந்துமதியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். தன்னிடம் பணம் இல்லை என இந்துமதி கூறியுள்ளார். இதில், ஆத்திரமடைந்த சுரேஷ் மனைவி இந்திமதியை சரமாரியாக தாக்கி கொலைமிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து இந்துமதி கொடுத்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் சுரேஷ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கிரைம் கார்னர்: சென்னை
-
சித்தானந்த சுவாமி கோவிலில் இன்று 189ம் ஆண்டு குரு பூஜை
-
மணக்குள விநாயகர் கோவிலில் அக்னி நட்சத்திர பூர்த்தி பூஜை
-
மாநில தடகள சாம்பியன்ஷிப் நெல்லையில் நாளை துவக்கம்
-
மாணவர்களுக்கு கோடை கால பயிற்சி முகாம் திருக்குறள் புத்தகம் வழங்கி விழிப்புணர்வு
-
இலவச மரக்கன்றுகள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
Advertisement
Advertisement