கம்யூ., கட்சி தலைவர்கள் கைது விருத்தாசலத்தில் ஆர்ப்பாட்டம்
விருத்தாசலம்: டில்லியில் கம்யூ., கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து, விருத்தாசலம் பாலக்கரையில் மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கேரள மாநில முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கதுறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனை எதிர்த்து டில்லியில் கம்யூ., கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களை போலீசார் கைது செய்தனர். இதனை கண்டித்து, விருத்தாசலம் பாலக்கரையில், மா.கம்யூ., சார்பில் நேற்று இரவு 8:00 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு, நகர செயலர் சங்கரய்யா தலைமை தாங்கினார். ஒன்றிய செயலர்கள் குமரகுரு, கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பழங்குடி சங்கத்தின் மாவட்ட செயலர் அசோகன், மூத்த நிர்வாகி சந்திரசேகரன், ஒன்றிய நிர்வாகிகள் செந்தில், சேகர், இதயத்துல்லா, வீரமணி, கிளை செயலர்கள் கணேசன், சட்டநாதன், வேல்முருகன், வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
போராட்டம் இரவு எட்டு மணிக்கு. ஏன் இங்கு கைது செய்யவில்லை?மேலும்
-
கிரைம் கார்னர்: சென்னை
-
சித்தானந்த சுவாமி கோவிலில் இன்று 189ம் ஆண்டு குரு பூஜை
-
மணக்குள விநாயகர் கோவிலில் அக்னி நட்சத்திர பூர்த்தி பூஜை
-
மாநில தடகள சாம்பியன்ஷிப் நெல்லையில் நாளை துவக்கம்
-
மாணவர்களுக்கு கோடை கால பயிற்சி முகாம் திருக்குறள் புத்தகம் வழங்கி விழிப்புணர்வு
-
இலவச மரக்கன்றுகள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு