தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200, வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைவு

2

சென்னை: சென்னையில் இன்று (மே 28) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1200 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 16 ஆயிரம் ரூபாய்க்கும், கிராமுக்கு 150 ரூபாய் குறைந்து 14,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில தினங்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் (மே 26) ஆபரண தங்கம் கிராம், 14,730 ரூபாய்க்கும், சவரன், 1,17,840 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 295 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்றைய தினம்



நேற்று (மே 27) தங்கம் விலை கிராமுக்கு, 80 ரூபாய் குறைந்து, 14,650 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 640 ரூபாய் சரிவடைந்து, 1,17,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

வெள்ளி கிராமுக்கு, ஐந்து ரூபாய் குறைந்து, 290 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கிலோவுக்கு, 5,000 ரூபாய் சரிவடைந்து, 2.90 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

இன்றைய தினம்



இந்நிலையில் இன்று (மே 28) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1200 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 16 ஆயிரம் ரூபாய்க்கும், கிராமுக்கு 150 ரூபாய் குறைந்து 14,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாட்களில் தங்கம் விலை 2,240 ரூபாய் சரிந்துள்ளது.

வெள்ளி நிலவரம்




வெள்ளி விலை கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு கிலோ 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கும், கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 285 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்

Advertisement