காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு இல்லை; சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்
புதுடில்லி: டில்லி பயணத்தை முடித்து கொண்டு சென்று திரும்பினார் முதல்வர் விஜய். அவர் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா மற்றும் ராகுலுடன் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.
மேகதாது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தியதாக டில்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேற்று முதல்வர் விஜய் சந்தித்து பேசினார்.
சந்திப்பு ரத்து
டில்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா மற்றும் ராகுலை முதல்வர் விஜய் சந்திக்க நேரம் கேட்டிருந்த நிலையில் தற்போது ரத்து செய்யப்பட்டது. முதல்வர் விஜய் அவசரமாக சென்னை திரும்பினார்.
@block_G@
தமிழக கூட்டணி அரசில் காங்கிரஸ் கட்சி அங்கம் வகிக்கும் நிலையில், சோனியா, ராகுலை முதல்வர் விஜய் மரியாதை நிமித்தம் சந்தித்து பேசுவார் என்று பல்வேறு தரப்பினரும் எதிர்பார்த்தனர்.
அதேபோல, இடதுசாரி கட்சிகளும் விஜய் அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், அந்த கட்சிகளின் தலைவர்களையும் முதல்வர் சந்திப்பார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்த சந்திப்புகள் நடக்கவில்லை. காரணம் என்னவாக இருக்கும் என்று பல்வேறு யூகங்கள் வெளியாகி வருகின்றன.block_G
@block_P@
இது குறித்து காங்கிரஸ் எம்பி கிறிஸ்டோபர் திலக் கூறியதாவது:இந்த முறை டில்லி பயணத்தை அதிகாரப்பூர்வ சந்திப்பாக முதல்வர் விஜய் வைத்து கொள்ள நினைத்ததாக நான் நினைக்கிறேன். பிரதமர் மோடியை சந்தித்து விட்டு போய்விட்டார்.
முதல்வர் விஜய் ஜூன் 11ம் தேதி நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டில்லி வர வாய்ப்புள்ளது. அப்போது சோனியா, ராகுல் ஆகியோருடன் சந்திப்பார்.இந்த விஷயத்தில் யோசிப்பதற்கு வேறு ஒன்றும் இல்லை. இவ்வாறு கிறிஸ்டோபர் திலக் கூறினார்.
block_P
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
டில்லி பயணத்தை முடித்துக்கொண்டு கிளம்பினார் முதல்வர் விஜய்; தினமலர் வெப்சைட், யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
விஜய்-ராகுல் மீட்டிங் ரத்து ஏன்? காங்கிரஸ் எம்பி கிறிஸ்டோபர் திலக் பேட்டி; தினமலர் வெப்சைட், யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
முழு பேட்டியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
காங்கிரஸ் கட்சி இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டுமென்று ஒவ்வொரு மாநிலத்திலும் பிஜேபி அரசு பணி செய்து காங்கிரசை விரட்டிக்கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் அந்தக்கட்சியை கூட்டணி சேர்த்து ஆட்சியில் பங்கேற்க வைத்துவிட்டதால் பாஜவில் மோடி முதல் அமித்ஷா வரை அனைவரும் விஜய் மீது கோபத்தில் இருக்கிறார்கள். ஆனால், மோடி பிரதமர். எனவே, அவர் மாநில முதலமைச்சர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதை நிமித்தம் அவர் விஜயை வரவேற்று அரசாங்க அலுவலக பேச்சு நடத்தியுள்ளார். ஆனால், அமிட்ஷா, அவ்வாறு அல்ல. காங்கிரஸ் கட்சியை விஜய் கூட்டணியிலிருந்து கழற்றிவிடும் வரை ஓயமாட்டார்.
தற்குறி கூட்டத்தினுடையது...
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்..
இங்கே வந்து என்ன செயப்போகிறார். டெல்லியில் தங்கி எல்லா மத்திய அமைச்சர்களையும் சந்தித்து மக்கள் நலன் குறித்து பேசி நல்லது செய்யலாமே . இங்கே வந்து மற்ற கட்சிகளை அழித்து தன கட்சியை வளர்க்க பார்க்கிறார் . மத மாற்றம் செய்யும் இனம் கட்சி மாற்றம் செய்கிறது. என்னே ஒரு குதிரை பேரம்
ராஜபகசேவுக்கு சோனியா வீட்டில் விருந்து வச்சாங்க, அப்பறம் கொஞ்ச நாளில் பதவி இழந்து ராஜபக்சே சொந்த நாட்டை விட்டு குடும்பத்தோடு தப்பி ஓடினான்...
ஷேக் ஹசீனாவுக்கு சோனியா வீட்டில் விருந்து வச்சாங்க, அப்பறம் கொஞ்ச நாளில் ஷேக் ஹசீனா பதவி இழந்து பங்களாதேஷ் நாட்டை விட்டே தப்பித்து இந்தியாவில் தஞ்சமடைந்தாங்க..
சமீபத்தில் ச்டாலினுக்கு கூட சோனியா வீட்டில் விருந்து வச்சாங்க, ச்டாலின் ஆட்சிப் போய், அவரும் தோற்று இப்ப ஊர் ஊராக கல்யாண விழாக்களில் ஒப்பாரி வச்சுட்டு இருக்கார்.
விருந்துக்கு அவ்வளவு ராசியான வீடு நம்பர் 10 ஜன்பத் ரோடு, புதுடெல்லி.அடுத்து நாளைக்கு அங்க ஜோசப் விஜய் விருந்துக்கு போறார், ஐயோ பாவம் இப்ப தான் ஜெயித்தார், அதுக்குள்ள இந்த நிலமையா ..
தப்பிச்சிட்டாரு போல..
ஒரு ஊடகம் செய்தி வெளியிட்டு இருந்தது . அதாவது விஜயை சந்திக்க அமித்ஷா நேரம் கேட்டதாகவும் ,இவர் மறுத்ததாகவும் . செம காமடி பண்றாங்க த வெ க வினர் .
தவெக எந்த வகையிலும் காங்கிரஸ் கட்சியை கழற்றி விடுவதே நல்லது. திமுக, காங்கிரஸ் உறவு முடிந்து விட்டதாக சொல்கின்றார்கள். அது உண்மையல்ல. அழகான ஒரு தமிழ் வார்த்தையைச் சொல்லி மீண்டும் இனைந்து விடுவார்கள். முதலில் திராவிடம் அழியட்டும்.
ஒவ்வொரு செயலுக்கும் ஓவ்வொரு வினை இருக்கும் . விஜய் காங்கிரஸ் கட்சி சோனியா காந்தி ராகுல் காந்தி கம்யூனிஸ்ட் தலைவர்களை பார்த்து இருந்தால் என்ன பார்க்காவிட்டால் என்ன. இப்படி அவரவருக்கு தோன்றிய அனுமான செய்திகளை ஏன் முதல்வர் விஜய் பதில் கூறிக்கொண்டு இருக்கவேண்டும். மோடிஜி எங்காவது பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி இருக்காரா? அவரையும் ஏதாவது குறை சொல்லிக்கொண்டுதான் இருக்கிறீர்கள். பேச்சு முக்கியம் இல்லை செயல்தான் முக்கியம் என்று பேசாமல் இருக்கலாம் இதுவும் ஒரு அனுமானம்தான்.
கோவிலில் திருமுறை ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன் , நீலகிரியைச் சேர்ந்த ஓவியர் ஆர்.கிருஷ்ணன்,சேலத்தை சேர்ந்த சிற்ப கலைஞர் காளியப்ப கவுண்டர், திருவாரூரைச் சேர்ந்த மிருதங்க கலைஞர் பக்தவச்சலம் இவர்களுக்கு மோடி அரசு பத்ம ஸ்ரீ விருது .....ஆனால் இவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது சமூக நீதி மத சார்பின்மைக்கு விரோதம் என்பதால் லாட்டரி கோட்டு சூட்டு இவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை ...
ராஜகோபாலன் பெரிய இவரா என்று கேட்கும் அன்பரே அவர் நேற்று சொன்னது இன்று நடந்ததா இல்லையா . அவர் பெரிய இவர்தான். நீங்கள் தான் சொல்லுங்களேன் பெரிய இவரு யாரு என்று.மேலும்
-
ராகுலுக்கு அரசியல் மறதி நோய்; பியூஷ் கோயல் விமர்சனம்
-
உழவர் சந்தை காய்கறி விலை விபரம்(28.05.2026)
-
சி.டி.சி.ஏ. போட்டி ‘சதம்’ அடித்த பரத்
-
பைக் மோதி ஆடு மேய்ப்பர் பலி
-
சாரப்பண்ணை ஓடையில் கட்டுமானம்மாநகராட்சிக்கு விவசாயிகள் கண்டனம்
-
3 செமஸ்டர் கட்டணத்தையும் மொத்தமாக செலுத்த உத்தரவு தொலை துார கல்வி மாணவர்கள் அதிருப்தி