முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா; காலில் விழுந்து ஆசி பெற்றார் சிவக்குமார்!
பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்ய உள்ள நிலையில் , துணை முதல்வர் சிவக்குமார் அவரது காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார் .
கர்நாடகாவில் கடந்த, 2023 சட்டசபை தேர்தலில், மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் தலைமையில், 135 இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது.சித்தராமையா, சிவகுமார் இடையில் முதல்வர் பதவிக்கு போட்டி எழுந்தது. கட்சி மேலிடத்தில் இருந்த செல்வாக்கு காரணமாக சித்தராமையா முதல்வர் ஆனார். சிவகுமார் துணை முதல்வராக பொறுப்பேற்றார்.
இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி என, கட்சி மேலிடம் ஒப்பந்தம் போட்டிருப்பதாக கூறப்படுகிறது. சித்தராமையா முதல்வராக பதவி ஏற்று மூன்றாண்டுகள் ஆகிவிட்டது. ஒப்பந்தப்படி அவர் பதவி விலகுவாரா அல்லது நீடிப்பாரா என்ற குழப்பம் நீடித்து வந்தது.டில்லி சென்ற சித்தராமையா மற்றும் சிவகுமாரிடம் மேலிட தலைவர்கள், 7 மணி நேரம், ஆலோசனை நடத்தினர். ராகுலுடன் நடத்திய ஆலோசனைக்கு பின், முதல்வர் பதவியை விட்டு கொடுக்க சித்தராமையா முன்வந்தார்.
அவசர மருத்துவ காரணங்களால் கவர்னர் சொந்த மாநிலமான ம.பி., சென்றிருக்கும் நிலையில், தன் ராஜினாமா கடிதத்தை கவர்னர் மாளிகை அதிகாரிகளிடம் சித்தராமையா ஒப்படைக்க உள்ளார். அதன் பிறகே புதிய முதல்வர் பதவியேற்பு எப்போது என்ற விவரங்கள் அறிவிக்கப்பட உள்ளன. தான் ராஜினாமா செய்ய இருப்பதை முன்னிட்டு, இத்தனை காலமாக தனக்கு ஆதரவளித்த அமைச்சர்களுக்கு தன் இல்லத்தில் காலை விருந்து கொடுத்தார்.
சித்தராமையா. இதில் சிவகுமாரும் பங்கேற்றார். அப்போது சித்தராமையா காலில் விழுந்து வணங்கி சிவக்குமார் ஆசி பெற்றார். அவரை கட்டித்தழுவி தன் ஆதரவை சித்தராமையா தெரிவித்தார். முதல்வர் பதவியை விட்டுத்தருவதை முன்னிட்டு, மாநில காங்கிரஸ் தலைவர் பதவி, சித்தராமையாவின் ஆதரவாளருக்கு வழங்கப்பட உள்ளது. அதேபோல, அவரது மகனுக்கும் முக்கிய பதவி வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
ராமையா ஒஸ்தாரையா என்று பாடிக்கொண்டே இருந்த காலம் போய் இப்போது ராமையா சென்றாரையா என்று பாட வேண்டிய தருணம் வந்து விட்டது
known டெவில் is பெட்டெர் than unknown evil
போயும்,போயும் அவர் காலில் விழுந்தாயே. பதவி வெறி பிடித்த அவர் வேண்டாவெறுப்பில் பதவியை ராஜினாமா செய்கிறார்.
முதல்வர் நார்காலிக்கு சிவகுமார் அடம்பிடித்து ஒப்பாரி வைத்து கடைசியில் விழுந்து கதறி உட்கார்ந்து விட்டார். கர்நாடகாவில் காங்கிரஸின் கடைசி காலம் என்பதை சிவாக்குமார் அறிந்து கொண்டு தான் இது மாதிரி பதவிக்கு அலைந்து கொண்டிருந்தார்.
காலில் விழுந்து காலை வாரி விடும் பழக்கம் உள்ளது நான் தமிழ்நாட்டை சொல்லலைங்க
இனி தான் காளியோட ஆட்டத்தை பார்க்க போகிறீர்கள் .... இனிமேல் தான் சித்துவின் சித்து விளையாட்டு ஆரம்பம் .
இந்த அரசியல்வாதிகள் ஒருவர் காலில் ஒருவர் விழுவதும், பின் ஒரு நாள் காலை வருவதும் அரசியலில் சகஜமப்பா... DKS - இந்த பொன்னான நாளுக்குத்தானே ஆசைப்பட்டாய் ராஜகுமாரா... முடிவில் அந்த முதல்வர் பதவி. நீங்கள் இப்ப காலில் விழுந்தீரே, அவர் ஆட்சியில் செய்த தவறுகளை சரிசெய்து, நல்லாட்சி கொடுக்க முயலுங்கள். வாழ்த்துக்கள்.
காலைவாரி விட்டு பின்ன என்ன காலில் விழுந்து ஆசி பெறுவது ?
எல்லோரும் போக்கிரி கூட்டம். மக்களுக்கு எந்தப் பயனும் கிடையாது இவர்களால். சுயநலம் பிடித்த கூட்டம். இயன்றவரை சுருட்டு அவ்வளவுதான் ஒரே கொள்கை.
காலில் விழுந்தார். சரி
ஆசி பெற்றாரா?மேலும்
-
ராகுலுக்கு அரசியல் மறதி நோய்; பியூஷ் கோயல் விமர்சனம்
-
உழவர் சந்தை காய்கறி விலை விபரம்(28.05.2026)
-
சி.டி.சி.ஏ. போட்டி ‘சதம்’ அடித்த பரத்
-
பைக் மோதி ஆடு மேய்ப்பர் பலி
-
சாரப்பண்ணை ஓடையில் கட்டுமானம்மாநகராட்சிக்கு விவசாயிகள் கண்டனம்
-
3 செமஸ்டர் கட்டணத்தையும் மொத்தமாக செலுத்த உத்தரவு தொலை துார கல்வி மாணவர்கள் அதிருப்தி