பிரதமர் மோடியை வரவேற்கும் வாய்ப்பு: ஆஸி., பிரதமர் மகிழ்ச்சி
சிட்னி: விரைவில் பிரதமர் மோடியை வரவேற்கும் வாய்ப்பு கிடைக்கும் என ஆஸி., பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
பிரதமர் மோடி, விரைவில் அரசு முறை சுற்றுப்பயணமாக ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறார். இது பற்றிய தகவலை, பிரதமர் அல்பானீஸ், அந்நாட்டு பார்லிமென்டில் அறிவித்தார். அவர் கூறியதாவது:
பிரதமராக இதுவரை நான் இந்தியாவுக்கு மேற்கொண்ட இரண்டு பயணங்களும் எனக்கு கவுரவம் கிடைத்தது. விரைவில் பிரதமர் மோடியை இங்கு வரவேற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவிருக்கிறது.
இந்த பாக்கியத்தை இரண்டாவது முறையாக மீண்டும் பெற ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
இந்திய- ஆஸ்திரேலிய சமூகத்தினரால் பிரதமர் மோடியின் பயணம் சிறப்பானதாக அமையும். உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடு இந்தியா. ஆஸ்திரேலியா- இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே பொருளாதார உறவு மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் நமது வர்த்தக உறவு மேம்படுத்தப்பட்டுள்ளது.
கலாசாரம், கல்வி ஆகியவற்றில் நாம் ஒன்றாக இணைந்துள்ளோம். இவ்வாறு அந்தோனி அல்பானீஸ் கூறியுள்ளார். பிரதமர் மோடி வருகை பற்றிய அறிவிப்பை அந்நாட்டு எம்.பி.,க்கள் கைதட்டி வரவேற்றனர்.
நமது பிரதமர் பல வெளிநாடுகளுக்கு சென்று ஒப்பந்தம் செய்கிறார். ஆனால் கடந்த 5 மாதங்களில் 21 நாட்டு தலைவர்கள் சீனாவுக்கு விஜயம் செய்திருக்கிறார்கள். சமீபத்தில் டிரம்ப் சென்றிருகிறார். இவை உணர்த்தும் செய்தி என்னவென்றால் சீனா அசுர வளர்ச்சி அடைந்து வருவதே ஆகும். சீனாவுடன் ஒப்பந்தம் செய்வதே நன்மை பயக்கும்.
பிரதமரின் வெளிநாட்டு பயணத்தில் அங்குள்ள இந்தியர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்
பிரதமர் மோடி வருகை பற்றிய அறிவிப்பை ஆஸ்திரேலியா நாட்டு எம்பிக்கள் கைதட்டி வரவேற்றனர். ஆனால், இங்கே இந்திய மண்ணில் வாழ்ந்துகொண்டு, இந்தியாவில் விளையும் உணவுப்பொருட்களை தின்றுகொண்டு இருக்கும் சோனியா, ராகுல், மமதா போன்ற பல தேசதுரோகிகள் மீண்டும் வெளிநாட்டு பயணமா என்று பொங்கி அழுகின்றனர்.மேலும்
-
விளையாட்டு செய்தி// சிறுவர்களுக்கான கிரிக்கெட் போட்டி லிட்டில் மாஸ்டர் சி.ஏ., அணி வெற்றி
-
செய்தி மட்டும் பழுதடைந்த குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் சீரமைக்க கோனேரிகுப்பம் மக்கள் வேண்டுகோள்
-
வயல்வெளியில் சாய்ந்த மின் கம்பங்கள் சீரமைப்பதில் அதிகாரிகள் அலட்சியம்
-
விளம்பரம் விருப்பம்/ பிரசன்னயோக ஆஞ்சநேய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
-
திருத்தணி அரசு கல்லுாரியில் விண்ணப்பிக்க இன்றே கடைசி
-
தங்கையிடம் ஆபாச சைகை நபரை தட்டிக்கேட்ட அண்ணன் மீது தாக்கு போதை ஆசாமி கைது