தங்கையிடம் ஆபாச சைகை நபரை தட்டிக்கேட்ட அண்ணன் மீது தாக்கு போதை ஆசாமி கைது

சென்னை: இளம்பெண்ணிடம் ஆபாச சைகை காட்டியதோடு, தட்டிக்கேட்ட அப்பெண்ணின் அண்ணன் மீது தாக்குதல் நடத்திய போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

அமைந்தகரை என்.எஸ்.கே., சாலையைச் சேர்ந்தவர் டில்லிபாபு, 28; ஆட்டோ ஓட்டுநர். கடந்த 25ம் தேதி இரவு தன் தங்கையை, ஆவடியில் உள்ள தாய் வீட்டிற்கு பேருந்தில் ஏற்றி விடுவதற்காக, கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு சென்றார்.

அப்போது அங்கு வந்த போதை ஆசாமி, டில்லிபாபுவின் தங்கையிடம் ஆபாச சைகை காட்டியுள்ளார். இதை டில்லிபாபு தட்டிக்கேட்ட போது, தகராறு செய்து தகாத வார்த்தைகள் பேசி, கீழே தள்ளி கல்லால் தாக்கியுள்ளார்.

தடுக்க வந்த டில்லிபாபுவின் தங்கையையும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றார். காயமடைந்த இருவரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து விசாரித்த போலீசார், பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த பிரவீன், 24 என்பவரை கைது செய்தனர்.

Advertisement