திருத்தணி அரசு கல்லுாரியில் விண்ணப்பிக்க இன்றே கடைசி

திருத்தணி, மே 29–

திருத்தணி அரசு கலைக் கல்லுாரியில், இளங்கலை முதலாமாண்டில் மாணவ – மாணவியர் சேர்வதற்கு, இன்று மாலை 5:00 மணிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என, கல்லுாரி முதல்வர் ஏகாதேவசேனா அறிவுறுத்தியுள்ளார்.

திருத்தணி சுப்ரமணிய சுவாமி அரசினர் கலைக் கல்லுாரியில், நடப்பாண்டில் இளங்கலை பட்டப்படிப்பில், பி.எஸ்.சி., கணிதம், இயற்பியல், கணினி அறிவியல், பி.ஏ., தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியியல், பி.காம்., கணக்குப்பதிவியில், வணிகவியல், தாவரவியல் போன்ற, 14 பாடப்பிரிவுகளில், 986 மாணவ – மாணவியர் சேர்வதற்கு, கடந்த 7ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கல்லுாரியில் மாணவ – மாணவியர் சேர்வதற்கு இன்றே கடைசி நாளாகும். ஆகையால், சேர விருப்பம் உள்ள மாணவ – மாணவியர், இன்று மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என, கல்லுாரி முதல்வர் ஏகாதேவசேனா தெரிவித்துள்ளார்.

மேலும், மாணவ – மாணவியரின் சந்தேகங்களுக்கு, 94444 16007 , 97861 43786 மற்றும் 99522 82245 ஆகிய மொபைல் எண்கள் எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என, கல்லுாரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement