மே.வங்கத்தில் ஆட்சி மாற்றம் எதிரொலி: வங்கதேசம் திரும்பும் ஊடுருவல்காரர்கள்

35

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் பாஜ தலைமையில் புது ஆட்சி அமைந்துள்ள நிலையில், அங்கு சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவர்கள் சொந்த நாட்டிற்கு திரும்ப எல்லைகளில் குவிந்து வருகின்றனர்.


வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக, மேற்கு வங்கத்தில் குடியேறினர். பாஜ பிரசாரத்தின் போது, அவர்களை வெளியேற்றுவோம் என தெரிவித்து இருந்தது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இதனையே கூறினர். சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பாஜ சுவேந்து அதிகாரி தலைமையில் ஆட்சி அமைத்துள்ளது.


இதனையடுத்து அம்மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள், சொந்த நாட்டிற்கு திரும்ப துவங்கியுள்ளனர். அவர்கள் வங்கதேச எல்லைகளை நோக்கி செல்கின்றனர்.


தங்களின் உடைமைகள், ஆடையாள அட்டைகளுடன் எல்லையை நோக்கி சென்ற வண்ணம் உள்ளனர்.
இதற்காக ஹக்கிம்பூர் சோதனைச்சாவடியில் போலீசார், அங்கு வருபவர்களின் விவரங்களை பதிவு செய்து வருகின்றனர். முகாம்களில் தங்க வைக்கப்படுவதற்கு முன்னர், அவர்களின் ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.


கடந்த சில நாட்களில் 350 பேரின் தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கோல்கட்டாவின் பல நகரங்களில் இருந்து 60க்கும் மேற்பட்டோர் எல்லை பகுதிகளை நோக்கி செல்கின்றனர். அவர்கள் அனைவரும் தரகர் அல்லது ஏஜென்ட்களிடம் பணம் கொடுத்த சட்டவிரோதமாக இந்தியாவுக்கு வந்து வேலை தேடியதாக தெரிவித்துள்ளனர்.


சமீப மாதங்களாக போலீசார் சோதன, ஆவணங்கள் சோதனை மற்றும் தடுப்பு முகாமில் தங்க வைக்கப்படுவோம் என்ற பயம் காரணமாக நாடு திரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

Advertisement