கோடை காலத்தில் வனத்தீ கண்காணிக்கும் வனத்துறை
உடுமலை: உடுமலை வனச்சரக அலுவலகத்தில், வனத்தீயை கட்டுப்படுத்தும் வகையில், கட்டுப்பாட்டு மையத்தில் கண்காணிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கோடை காலம் மற்றும் வறட்சி காலங்களில், அரிய வகை மரங்கள், பல்லுயிரினங்கள் பாதிப்பதை தடுக்கும் வகையில், தீத்தடுப்பு கோடுகள் அமைத்தல், கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளில் வனத்துறையினர் ஈடுபடுகின்றனர்.
அதோடு, வனத்தீ ஏற்படுவதை கண்காணிக்க செயற்கை கோள் உதவியுடன், மாநில கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இம்மையத்தில், வனப்பகுதிகளில் தீ ஏற்பட்டால், அதனை கண்காணித்து, உடனடியாக, அந்த பகுயிலுள்ள, வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு,, கட்டுப்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்ட பகுதிகளில், வனத்தீ ஏற்பட்டால், உடனடியாக கண்காணித்து, சம்பந்தப்பட்ட வனத்துறையினர், தீ தடுப்பு காவலர்கள் வாயிலாக, வனத்தீயை கட்டுப்படுத்தும் வகையில், வனச்சரக அலுவலகங்களில், கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது கோடையின் தாக்கம் அதிகரித்து, வனப்பகுதிகளில் வறட்சி நிலை காணப்படுவதால், கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
உடுமலை வனப்பகுதிகளில் வனத்தீயை கட்டுப்படுத்தும் வகையில், வனத்தீ கட்டுப்பாட்டு மையத்தில், அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும்
-
ராகுலுக்கு அரசியல் மறதி நோய்; பியூஷ் கோயல் விமர்சனம்
-
உழவர் சந்தை காய்கறி விலை விபரம்(28.05.2026)
-
சி.டி.சி.ஏ. போட்டி ‘சதம்’ அடித்த பரத்
-
பைக் மோதி ஆடு மேய்ப்பர் பலி
-
சாரப்பண்ணை ஓடையில் கட்டுமானம்மாநகராட்சிக்கு விவசாயிகள் கண்டனம்
-
3 செமஸ்டர் கட்டணத்தையும் மொத்தமாக செலுத்த உத்தரவு தொலை துார கல்வி மாணவர்கள் அதிருப்தி