அனந்தீஸ்வரர் கோவில் பிரமோற்சவ தேரோட்டம் 

காட்டுமன்னார்கோவில்: அனந்தீஸ்வரர் கோவில் வைகாசி விசாக பிரமோற்சவ திருத்தேரோட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

காட்டுமன்னார்கோவில், உடையார்குடி, அனந்தீஸ்வரர் கோவில் வைகாசி விசாகம் பிரமோற்சவம் கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதனையொட்டி தினமும் காலை சவுந்தரநாயகி சமேத அனந்தீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.

மாலை பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா காட்சி நடந்தது. 27ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

நேற்று சுவாமி திருத்தேரோட்டம் நடந்தது. இதனையொட்டி , காலை சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், மகா தீபாராதனைகள் நடைபெற்று, மேளதாளத்துடன் சுவாமி புறப்பாடு செய்து தேரில் எழுந்தருளி, திருத்தேரோட்டம் நடந்தது. 

Advertisement