ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்படியே விவசாய கடன் தள்ளுபடி; நிதி அமைச்சர் மரியவில்சன்
வேளாங்கண்ணி; விவசாய கடன் தள்ளுபடியானது, ரிசர்வ் வங்கி அறிவுறுத்தலின்படியே செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆட்சியில் விவசாய கடன் தள்ளுபடி விவகாரத்தில் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை என்று நிதி அமைச்சர் மரியவில்சன் கூறி உள்ளார்.
அவர் அளித்த பேட்டி; திமுக ஆட்சியில் நிதி மேலாண்மை குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்வதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2 வாரங்களில் தாக்கல் செய்வோம். வெள்ளை அறிக்கையில் பல விஷயங்கள் சொல்லக்கூடிய வகையில் இருக்கும்.
அனைத்துத் துறைகளில் ஆய்வுக்கூட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தணிக்கை அறிக்கைகளை கேட்டுள்ளேன். குறிப்பாக மதுரை மாநகராட்சியில் ஊழல் பற்றிய ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. அனைத்தும் விரைவில் வெளியிடப்படும்.
தேர்தல் பிரசாரத்தின் போது பல்வேறு தரப்பில் இருந்து எங்களுக்கும் பல விஷயங்களை தெரிவித்து உள்ளனர். திமுக ஆட்சியில் ரூ.1000 உரிமைத்தொகை வடமாநிலத்தவருக்கும் கொடுத்துள்ளனர் என்று எங்களிடம் கூறி இருக்கின்றனர். அதை என்னிடம் தெரியப்படுத்தி உள்ளனர். இது தொடர்பாக அறிக்கை கேட்டுள்ளோம். சம்பந்தப்பட்ட துறையில் இருந்து விரைவில் எங்களுக்கு தரப்படும்.
விவசாய கடன் தள்ளுபடியானது, ரிசர்வ் வங்கி அறிவுறுத்தலின்படியே செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆட்சியில் விவசாய கடன் தள்ளுபடி விவகாரத்தில் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை.
2021ம் ஆண்டு அதிமுக ஆட்சி அறிவித்துவிட்டு போனதை அதன் பின்னர் வந்த திமுக ஆட்சி பல்வேறு தவணைகளாக அறிவித்து தள்ளுபடி செய்து நடைமுறைப்படுத்தியது. 2024ல் ரிசர்வ் வங்கி ஒரு புதிய விதிமுறை சொல்லி இருக்கிறது. 45 நாட்களுக்கு கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று எங்களுக்கு நேரம் கொடுத்துள்ளனர்.அதனையொட்டியே இந்த முடிவு எடுத்துள்ளோம்.
திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் மகளிர் உரிமைத்தொகை பற்றிய விவரங்கள் தெரிய வரும். இது ஒரு ஜனநாயக நாடு. யாரும் எந்த கட்சியிலும் சேர்ந்து கொள்ளலாம். அந்த அடிப்படையில் அதிமுகவினர் தவெகவில் இணைகின்றனர். அதை வரவேற்க வேண்டும்.
இவ்வாறு நிதியமைச்சர் மரியவில்சன் கூறினார்.
தினமலர் நேரலை!
விரைவில் வெள்ளை அறிக்கை: பல விஷயங்கள் வெளிவரும்; அமைச்சர் மரிய வில்சன் பரபரப்பு பேட்டி; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது.
முழு பேட்டியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல் படிதான் தமிழக வளர்ச்சிக்காக கடன் வாங்கியது முந்தைய அரசு . இவர்கள் மக்களை ஏமாற்றி அதிகம் கடன் வாங்கிவிட்டதா கூறி கழகம் செய்து ஆட்சியைப்பிடித்து விட்டு இப்போது இப்படியா?. வெட்டி கழகம் எப்போது திருந்தும் . இவர்களுக்கு வாக்களித்த மக்கள் எப்போது திருந்துவார்கள்?.
எல்லாம் மந்திரி ஆனா, இப்படி தான் பேசுவாங்க
ரிசர்வ்பேங்க் அறிவுறத்தல்படி செய்வதூன்னா எந்த லட்சணத்துல நீங்க தேர்தலில் வாக்குறுதி கொடுத்தீர்கள். பிரடுத்தனம்தான்.
சரி யாரோட அறிவுறுத்தலின்படி ஒரு பெண்ணை மரக்கட்டையை வைத்து அடித்து வெளுத்தாய் அதையும் சொல்லுங்க மந்திரி சார்
ரிசர்வ் வங்கி இருப்பது கூட வாக்குறுதி வாய்ப்பந்தல் போடும்போது தெரியாதா?? கடவுளே எங்களை ,தமிழ் மக்கள்ஐ காப்பாற்ற வேண்டும்...
எல்லாம் மேல உள்ளவன் பாத்துக்குவான் என்ற தத்துவப்படி, மத்திய அரசை குற்றம் சொல்லி தமிழக அரசுகள் இதுவரை அரசியல் செய்தது போக, இப்போது ரிசெர்வ் வங்கி உதவிக்கு வந்து உள்ளது. வசதி உள்ள உள்ளூர் பண்ணையார்களும் இந்த கடன் தள்ளுபடியை வாங்க போராடுவது கூட்டுறவு வங்கிகளை திவாலாக்கி உள்ளது.
மிக மோசமான நிதி பிரச்சனையால் பல தமிழக நிறுவனங்கள் தள்ளாடுகின்றன. இதே தள்ளுபடி, இலவச அரசியல், இலவச பயணம், இன்னும் 10 ஆண்டு தொடர்ந்தால் தமிழக அரசே திவால் ஆக வாய்ப்பு அதிகம் உள்ளது.
வாக்கு ருதி குடுக்கும் போது என்ன சாப்ட
ஜெயிப்போம் என்ற நம்பிக்கை இல்லை அதுவும் நாந்தான் நிதி மந்திரி ஆவோம்னு தெரியாது
tamilnadu farmers vote stop in tvk...
உங்க கட்சி வாக்குறுதிக்கும் ரெசெர்வ் வங்கிக்கும் என்னப்பா சம்பந்தம். அவங்கள கேட்டா வாக்குறுதி கொடுத்தீங்க.
வாய் கிழிய வாக்குறுதி கொடுக்கும்போது அதெல்லாம் தெரியாதா ? பழி போடா ஆள் தேடுறதுல திமுக வையே மிஞ்சிட்டிங்க போங்க