முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டால்நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை
நாமக்கல்:''ஆய்வின் போது முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மாநில வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அ
மைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் கூறினார்.
நாமக்கல் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில், மாநில வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன், நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பத்திரப்பதிவு அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், இணைய தளங்களில் பத்திரப்பதிவு முறையாக மாவட்ட அளவில் நடைபெற்றதா என, அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
அப்போது, நிருபர்களிடம் அவர் கூறியதாவது:லஞ்சம் ஏதும் இல்லாமல் மக்களுக்கு எளிதாக பத்திரப்பதிவு செய்து கொடுக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு. நாமக்கல் சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு செய்யப்பட்டது. தேதி வாரியாக பத்திரப்பதிவு ஆவணங்கள் ஏற்கப்பட்டது மற்றும் திருப்பி அளிக்கப்பட்டது குறித்து இணையதளம் வாயிலாக ஆய்வு செய்யப்பட்டது. இதுபோன்ற திடீர் ஆய்வுகள், சார்பதிவாளர் அலுவலகங்களில் அவ்வப்போது நடத்தப்படும். அதில், முறைகேடு ஏதாவது கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.