சேந்தமங்கலத்தில்ரவுடிக்கு 'குண்டாஸ்'
சேந்தமங்கலம்:சேந்தமங்கலம் அடுத்த கல்குறிச்சி, தேவேந்திர தெருவை சேர்ந்தவர் அஜித், 26; கூலித்தொழிலாளி. கடந்த, 1 அன்று சேந்தமங்கலம் அருகே உள்ள முத்துகாப்பட்டி பெரியசாமி கோவிலுக்கு செல்லும் வழியில் அஜித் அவருடைய நண்பர்கள், மூன்று பேருடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டும் வகையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பதாக, சேந்தமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு சென்ற போலீசார், அஜித்தை கைது செய்து, நாமக்கல் கிளை சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால், அஜித்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்து எஸ்.பி., விமலா, கலெக்டர் துர்கா மூர்த்திக்கு பரிந்துரைத்தார். இதையேற்ற கலெக்டர், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அஜித்தை கைது செய்ய உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகலை அவரிடம் ஒப்படைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement