வைகாசி விசாக திருவிழா 

மந்தாரக்குப்பம்: புவனேஸ்வரி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவில் ஏராளமனோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

மந்தாரக்குப்பம் கடைவீதியில் உள்ள புவனேஸ்வரி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி நேற்று காலை 10:00 மணியளவில், பெரியாக்குறிச்சி ஆதிபராசக்தி  கோவில் எதிரில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

அதை தொடர்ந்து லட்சுமி, புவனேஸ்வரி, சரஸ்வதி அம்மனுக்கு பால்,தயிர், சந்தனம், இளநீர், விபூதி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிேஷகம் மற்றும் ஆராதனை நடந்தது. உலக நன்மை வேண்டி பக்தர்கள் தீபமேற்றி வழிப்பட்டனர்.

தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அம்மன் வீதியுலா நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை புவனேஸ்வரி அம்மன் ஆலய அன்னதான குழுவினர் மற்றும் வியாபாரிகள் சிறப்பாக செய்து இருந்தனர்.

Advertisement