ஒரே இரவில் 70 ஏவுகணைகள், 650 ட்ரோன்களை ஏவி ரஷ்யா தாக்குதல்; உக்ரைனில் 22 பேர் பலி
கீவ்: உக்ரைனில் ஒரே இரவில் ரஷ்யா 70க்கும் மேற்பட்ட ஏவுகணைகளையும், 650 ட்ரோன்களையும் பயன்படுத்தி நடத்திய தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர்.
உக்ரைனில் மீண்டும் ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. உக்ரைனில் ஒரே இரவில் ரஷ்யா 70க்கும் மேற்பட்ட ஏவுகணைகளையும், 650 ட்ரோன்களையும் பயன்படுத்தி ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்தார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:
துரதிர்ஷ்டவசமாக நேற்று இரவு ரஷ்யா தாக்குதல்களை நடத்தியது. இதில் 130 பேர் காயமடைந்தனர். துயரமான விஷயம் என்னவென்றால், இரண்டு குழந்தைகள் உட்பட 22 பேர் உயிரிழந்தனர். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். இன்றிரவே மற்றொரு பெரிய அளவிலான தாக்குதல் வரக்கூடும் என்று உளவுத்துறை மூலம் நாம் அறிகிறோம்.
நமது கூட்டாளிகள் அனைவரும் ஒன்றிணைந்தும், ஐரோப்பாவில் உள்ள அனைவரும், நமது வான் பாதுகாப்புக்கான ஏவுகணைகளையும் வலுப்படுத்த தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.எங்கள் மக்களையும், நகரங்களையும் பாதுகாக்க எங்களால் இயன்ற அனைத்தையும் நாங்கள் செய்து வருகிறோம். எங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவோருக்கு நாங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
உக்ரைன் இத்தாலிக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது. நீங்கள் எங்கள் மீது அக்கறை கொள்வதையும், எங்களுக்காக அமைதியை விரும்புவதையும் நாங்கள் பெரிதும் மதிக்கிறோம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து, நிச்சயமாக இந்த இலக்கை அடைவோம். இவ்வாறு ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
நீ என்ன உலக நாடுகளுக்கு உதவி செஞ்ச...... உன் வீட்டில் சண்டை என்றால் நீ தான் பார்க்கவேண்டும் உலகில் உள்ள எல்லா நாடுகளும் உதவானுமா......இப்படி கூத்தாடிகளை நம்பி ஒட்டு போட்டால் மக்கள் இப்படித்தான் சாகவேண்டி வரும்......மேலும்
-
காங்கிரசுக்கு ராஜ்யசபா சீட்: முதல்வர் விஜய் அறிவிப்பு
-
சிறுத்தை நடமாட்டம் கிராம மக்கள் அச்சம்
-
புகார் பெட்டி
-
ஏரியில் நாணல் செடிகள் தீவைத்து எரிப்பு சாலையோர மரங்களும் தீயில் கருகும் அபாயம்
-
எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ. 10,000 கோடி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
-
நிழற்குடையை தள்ளி வைக்க அதிகாரிகள் முடிவு