ஹூண்டாய் 'எக்ஸ்டர்' 2026 டேஷ்கேம் வரும் ஒரே காம்பேக்ட் எஸ்.யூ.வி.,

'ஹூண்டாய்' நிறுவனம், அதன் 'எக்ஸ்டர்' எஸ்.யூ.வி., காரை மேம்படுத்தி, 2026 மாடலில் அறிமுகம் செய்துள்ளது. இது, பெட்ரோல் மற்றும் சி.என்.ஜி., என மொத்தம் 15 மாடல்களில் கிடைக்கிறது.

இந்த காரில், 1.2 லிட்டர், 'கப்பா' என்.ஏ., பெட்ரோல் இன்ஜின் வருகிறது. காம்பேக்ட் எஸ்.யூ.வி., பிரிவில், 4 - சிலிண்டர் இன்ஜினுடன் வரும் ஒரே கார் இது. இப்பிரிவில் உயரமான மற்றும் வீல் பேஸ் அதிகமான காராகவும் இது விளங்குகிறது. பெட்ரோல் மாடலுக்கு 5 -ஸ்பீட் மேனுவல் மற்றும் ஏ.எம்.டி., ஆட்டோ கியர்பாக்ஸ்சும், சி.என்.ஜி., மாடலுக்கு, மேனுவல் கியர்பாக்சும் கிடைக்கிறது.
Latest Tamil News
பம்பர்கள், கருப்பு கிரில், 15 அங்குல அலாய் சக்கரங்கள் ஆகியவை மேம்படுத்தப்பட்டுள்ளன. இப்பிரிவில் எந்த காரிலும் வராத டேஷ் கேம் வசதி, இதில் வந்துள்ளது. ஒயர்லெஸ் இணைப்பு வசதிகள், சி-டைப் சார்ஜிங் போர்ட், எலக்ட்ரிக் சன்ரூப், '3டி' டேஸ்போர்டு வடிவமைப்பு, 'டி' கட் ஸ்டீயரிங், 300க்கும் அதிகமான வாய்ஸ் கமேண்ட் வசதி ஆகியவை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

ஆறு காற்று பைகள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், 30க்கும் அதிகமான பாதுகாப்பு அம்சங்கள் அடிப்படையாக இருக்கின்றன. இந்த கார், இரு புதிய நிறங்கள் உட்பட, மொத்த 8 நிறங்களில் கிடைக்கிறது.

Advertisement