காரைக்குடியில் அம்மா உணவகம் புதுப்பிப்பு இல்லை தினமும் புளியோதரை வழங்குவதால் அதிருப்தி
காரைக்குடி: தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களை புதுப்பித்து சீரமைக்க முதல்வர் விஜய் உத்தரவிட்ட நிலையில், காரைக்குடி அம்மா உணவகத்தை அமைச்சர் பிரபு ஆய்வு செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வராக இருந்த ஜெயலலிதா ஆட்சியில் பல இடங்களில் அம்மா உணவகம் துவங்கப்பட்ட நிலையில் காரைக்குடியில் 2015ம் ஆண்டு ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் அம்மா உணவகம் தொடங்கப்பட்டது. தினமும்,கூலித் தொழிலாளர்கள் பள்ளி செல்லும் குழந்தைகள் வேலைக்குச் செல்லும் பெண்கள் என பல்வேறு தரப்பினரும் அம்மா உணவகத்தை பயன்படுத்தினர்.
காலையில் இட்லி அல்லது பொங்கல், மதியம் தயிர்சாதம் மற்றும் சாம்பார் அல்லது புளி சாதம் குறைந்த விலையில் விற்கப்படுகிறது. தினமும் 900 க்கும் மேற்பட்டோர் உணவருந்தி வருகின்றனர். காரைக்குடி அம்மா உணவகத்தில் கூரை இடிந்து விழுந்து பல மாதங்களாகியும் இதுவரை சரி செய்யப்படவில்லை. சுட்டெரிக்கும் வெயில் காலத்திலும் மின்விசிறி இல்லாமல் வயதானவர்கள் சிரமப்படுகின்றனர்.
முதல்வராக விஜய் பதவியேற்ற நிலையில் அம்மா உணவகங்களை புதுப்பித்து சீரமைக்க உத்தரவிட்டார். சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் உள்ள அம்மா உணவக உள்கட்டமைப்பு மற்றும் உணவு தரத்தை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆனால் காரைக்குடி அம்மா உணவகத்தில் அமைச்சர் பிரபு நேரடியாக ஆய்வு செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுகுறித்து மகாலிங்கம் கூறுகையில்:
தேவகோட்டை உட்பட பல பகுதிகளிலும் உள்ள அம்மா உணவகங்களில் சாம்பார் சாதம் வழங்கப்படுகிறது. ஆனால் காரைக்குடியில் சாம்பார் காய்கறி ஏதும் இல்லாமல் வெறும் புளியோதரையை கொடுப்பதால் வயதானவர்கள் சாப்பிட முடியாமல் சிரமப்படுகின்றனர். கூரை இடிந்து விழுந்து, மின்விசிறிகள் இல்லாமல் பல மாதங்களாக கிடக்கிறது.
பிற பகுதிகளை போல காரைக்குடி அம்மா உணவகத்தை முறையாக பராமரித்து தரமான உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
டில்லி உணவகத்தில் தீ விபத்து; 10 பேர் உயிரிழப்பு
-
டாஸ்மாக் மதுக்கடைகளில் கூடுதல் வசூல் புகார்; முடிவு கட்ட முதல்வர் ஆலோசனை
-
சொல்கிறார்கள் –––––––––––– எங்கள் கிராமத்திலேயே வருமான வரி கட்டும் முதல் பெண் நான்!
-
தமிழகத்தின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் பதவியேற்பு
-
இந்தியா உட்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி; அமெரிக்கா பரிந்துரை
-
சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 18 பேர் கைது; மேற்கு வங்க அரசு அதிரடி