மீண்டும் மேற்காசியாவில் பதற்றம்; வளைகுடா நாடுகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; முறியடித்தது அமெரிக்கா
வாஷிங்டன்: குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது ஈரான் மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு அமெரிக்காவும் பதில் தாக்குதல் நடத்தி வருவதால், மேற்காசியாவில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த பிப்ரவரி 28ம் தேதி முதல் போர் நடந்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதனால், தற்காலிக போர் நிறுத்தம் அமலில் இருந்து வருகிறது. ஈரான் தங்களுடன் ஒப்பந்தம் செய்ய விரும்புவதாகவும், விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால், ஈரான் அதில் உடன்படாமல் இருந்து வருகிறது.
இதனால், போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாவில் இழுபறி நீடிக்கிறது. இந்த சூழலில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, இருதரப்பினரும் பரஸ்பர தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில்,வளைகுடா நாடுகள் மீது ஈரான் நடத்திய தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், இதற்கு பதிலடியாக, கெய்ஷ்ம் தீவு மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மேற்காசியாவில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; ஈரான் தனது அண்டை நாடுகள் மீது பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது. ஆனால், இந்த தாக்குதல் எதுவுமே வெற்றியடையவில்லை. குவைத் மீது ஏவப்பட்ட இரண்டு ஈரான் ஏவுகணைகள் இலக்கை எட்டாமல் வழியிலேயே வீழ்த்தப்பட்டன. மேலும் பஹ்ரைனை நோக்கி ஏவப்பட்ட மூன்று ஏவுகணைகள் அமெரிக்க மற்றும் பஹ்ரைன் வான் பாதுகாப்புப் படைகளால் உடனடியாக முறியடிக்கப்பட்டன, இவ்வாறு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடந்த வரும் சூழலில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்தை நீட்டிப்பது குறித்து, மத்தியஸ்தர்களுடனான பேச்சுவார்த்தையை ஈரான் நிறுத்திவிட்டதாக ஈரான் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், அதிபர்டிரம்ப் இந்தத் தகவலை மறுத்துள்ளதுடன், பேச்சுவார்த்தைகள் இன்னும் தொடர்ந்து வருவதாகக் கூறியுள்ளார்.
மேலும், அமெரிக்க அரசால் நட்பு நாடுகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக உருவாக்கப்படவிருந்த ஆயுதமயமாக்கல் எதிர்ப்பு நிதி திட்டத்தை டிரம்ப் நிர்வாகம் கைவிட்டுள்ளதாக தற்காலிக அட்டர்னி ஜெனரல் டாட் பிளான்ச் தெரிவித்துள்ளார்.
இந்த போரை ட்ரம்ப் நாட்களை கடத்தாமல் ஏதாவது செய்து உடனடியாக முடிவுக்கு கொண்டு வரவும். அத்துணை நாடுகளும் காலவரையின்றி துன்பபடமுடியாது.மேலும்
-
டில்லி உணவகத்தில் தீ விபத்து; 10 பேர் உயிரிழப்பு
-
டாஸ்மாக் மதுக்கடைகளில் கூடுதல் வசூல் புகார்; முடிவு கட்ட முதல்வர் ஆலோசனை
-
சொல்கிறார்கள் –––––––––––– எங்கள் கிராமத்திலேயே வருமான வரி கட்டும் முதல் பெண் நான்!
-
தமிழகத்தின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் பதவியேற்பு
-
இந்தியா உட்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி; அமெரிக்கா பரிந்துரை
-
சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 18 பேர் கைது; மேற்கு வங்க அரசு அதிரடி