பொலி காளை உறை விந்து உற்பத்தி: கால்நடை துறை அதிகாரிகள் ஆய்வு
ஊட்டி:ஊட்டி தீட்டுக்கல் பகுதியில் கால்நடை பராமரிப்புத்துறை கட்டுப்பாட்டில் மாவட்ட கால்நடை பண்ணை சுமார், 130 ஏக்கரில் செயல்பட்டு வருகிறது. இங்கு உயர் மரபுத்திறன் கொண்ட ஜெர்சி, கலப்பின ஜெர்சி, பிரிசியன் மற்றும் பிரிசியன் கலப்பினம் என மொத்தம், 80-க்கும் மேற்பட்ட பொலி காளைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த கால்நடை பண்ணையில் பொலி காளைகள் உறைவிந்து உற்பத்தி நிலையம் மற்றும் ஆய்வகம் உள்ளது.
பொலி காளைகளில் இருந்து உறை விந்து உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும், இங்குள்ள ஆய்வகத்தில் பல்வேறு சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நவீன ஆய்வகம் வாயிலாக உற்பத்தி செய்யப்படும் விந்தணுக்கள், 93 சதவீதம் பெண் கன்றுகள் பிறப்பதை உறுதி செய்கின்றன. இதனால் பால் உற்பத்தியை பெருக்க செயற்கை முறை கருவூட்டலுக்கு இது பெரிதும் உதவுகிறது. கால்நடை பராமரிப்பு மையத்தில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
மேலும்
-
தீக்குளிக்க முயன்ற குடும்பத்தினர்: கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
-
சப்-இன்ஸ்பெக்டர்கள் பொறுப்பேற்பு
-
நெல்லில் மஞ்சள் நிற நோய் தாக்குதல் வேளாண் அதிகாரிகள் ஆய்வு: தினமலர் செய்தி எதிரொலி
-
தேர்தலில் அ.தி.மு.க., நம்மை மதிக்கவில்லை நம் கட்சி நிர்வாகிகளிடம் ஒற்றுமை இல்லை: ஆலோசனைக் கூட்டத்தில் பா.ஜ.,வினர் குமுறல்
-
திருப்புவனம் நிகழ்ச்சி
-
நாட்டரசன்கோட்டையில் மாட்டு வண்டி பந்தயம்