நாட்டரசன்கோட்டையில் மாட்டு வண்டி பந்தயம்   

சிவகங்கை, ஜூன் 2-நாட்டரசன்கோட்டையில்  வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. இதில் சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து பெரிய மாடு பிரிவில் 8 ஜோடி, சிறிய மாடு பிரிவில் 21 ஜோடிகள் வீதம் 29 ஜோடி வண்டிகள் பங்கேற்றன. மதுரை - தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் நடந்தது. போட்டியில் பெரிய, சிறிய மாடு பிரிவில் முதல் 4 இடங்களை பிடித்த மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கும், சாரதிக்கும் பரிசு வழங்கினர். //

 

Advertisement