சப்-இன்ஸ்பெக்டர்கள்  பொறுப்பேற்பு 

புவனகிரி: புவனகிரி போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர்களாக இருவர் பொறுப்பேற்றனர்.

புவனகிரி போலீஸ் நிலைய சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த செல்வராஜ், ஊ.மங்கலம் போலீஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக பரங்கிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய பிரகாஷ் மற்றும் பாஸ்கர் இருவரும் இடமாற்றம் செய்யப்பட்டு, புவனகிரி போலீஸ் நிலையத்தில் நேற்று பொறுப்பேற்றனர். இருவரையும் இன்ஸ்பெக்டர் முத்துஈஸ்வரன் உள்ளிட்ட போலீசார் வரவேற்று வாழ்த்தினர்.

 

Advertisement